nஎன்.ஆர்.காங்கிரஸ் – அதிமுக கூட்டணி முறிவு?

public

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் ரங்கசாமி, அதிமுக கூட்டணியை விரும்பினார். ஆனால், சரியான ரிசல்ட் இல்லாததால் கொஞ்சம் துவண்டு போய்தான் இருக்கிறார். அதிமுக எம்எல்ஏ-க்கள் ஓம்சக்தி சேகரும், அன்பழகனும் முதல்வர் ரங்கசாமியைச் சந்தித்து புதுச்சேரியின் அதிமுக பொறுப்பாளர் அமைச்சர் சம்பத்திடம் கூட்டணி விஷயமாகப் பேசச் சொல்லியுள்ளார்கள். முதல்வர் ரங்கசாமியும், ‘நீங்கள் விரும்புவதால் நான் பேசுகிறேன்’ என்று ஏப்ரல் 23-ம் தேதி சம்பத்திடம் பேசினார். சம்பத் போகாத ஊருக்கு வழி சொல்வதுபோல் பேசினாராம். சரி, இது சரிபடாது என்று விரக்தியில் திரும்பியவர், 30 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை தயார் செய்து ஏப்ரல் 24-ம் தேதி சேலம் அப்பா பைத்தியசாமியிடம் சென்று பட்டியலை படைத்துவிட்டு திரும்பியுள்ளார். திமுக, அதிமுக, காங்கிரஸ் கட்சியில் சீட் கிடைக்காதவர்கள் யாராவது வருவார்களா? என்று எதிர்பார்த்திருக்கிறார். யாரையும் காணோம். அதனால் விரைவில் வேட்பாளர் பட்டியல் வெளியாகும். ஏப்ரல் 29-ல் வேட்புமனு தாக்கல் செய்யப்படும் என்கிறார்கள், முதல்வரைச் சுற்றியுள்ளவர்கள்.

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *