Nஎந்திரன் கெட்-அப்பில் தமன்னா

public

ரஜினியின் எந்திரன் கெட்-அப்பில் தமன்னா இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

2.0 இசை வெளியீடு துபாயில் நடைபெற்ற அதே சமயத்தில் சமூக வலைதளங்களில் தமன்னா எந்திரன் கெட்-அப்பில் இருக்கும் புகைப்படங்கள் அதிகமாகப் பரவின. சிலர் தமன்னா 2.0 இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் இந்த உடையணிந்து நடனமாடியதாகத் தகவல் பரப்பினர். ஆனால், இந்தத் தகவல் தவறானது.

தமன்னாவின் அந்த எந்திரன் தோற்றப் புகைப்படம் ஸ்டார் பிளஸ் டிவியில் ‘லிப் சிங்க் பேட்டில்’ (Lip Sync Battle) என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது எடுக்கப்பட்டது. பிரபல இயக்குநர் ஃபரா கான் நடத்தும் நிகழ்ச்சியில் கிரிக்கெட் வீரர் இர்பான் பதானுடன் தமன்னா கலந்துகொண்டார்.அந்த நிகழ்ச்சியில் அவர்களுக்குப் பிடித்தமான நபரின் தோற்றத்தில் நடித்துக் காட்டுவது நிகழ்ச்சியின் ஒரு பகுதி. அதில் தான் தமன்னா ரஜினியின் எந்திரன் கெட்-அப்பில் நடித்திருக்கிறார்.

“எனக்கு சிறு வயதிலிருந்தே ரஜினி சாரைப் பிடிக்கும். அவர்தான் எனக்கு இன்ஸ்பிரேஷன். அதனால் இதை அவருக்கு அர்ப்பணிக்கிறேன்” என்று சொல்லி [தமன்னா ரஜினியைப் போல](https://www.youtube.com/watch?v=2GCKlA3G-Rw) நடித்துக் காட்டியுள்ளார்.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0