தினப் பெட்டகம் – 10 (04.09.2018)
வீட்டில் ஒரு ஈ வந்தால் போதும், ரணகளம் ஆகிவிடுகிறது. சாப்பிடும்போது சாப்பாட்டில் வந்தமர்வதும், வெட்டி வைத்திருக்கும் காய்கறிகள், பழங்களில் அமர்வதும், முகத்திற்கு முன்னால் பறந்துகொண்டே இருப்பதும் எரிச்சலாக இருக்கும்.
அந்த ஈக்களைப் பற்றிய தகவல்கள்:
1. பிறந்த இடத்தில் இருந்து 13 மைல்கள் வரை ஈ பயணம் செய்யும்.
2. ஒரு சாதாரண ஈயின் வேகம், ஒரு மணி நேரத்திற்கு 5 மைல்கள்.
3. ஈயின் கண்களில் 4000 லென்ஸ்கள் இருக்கின்றனவாம்.
4. ஒரு பெண் ஈ, தன் வாழ்நாளில் குறைந்தது 21 முறை முட்டையிடும். ஒரு முறைக்கு ஏறத்தாழ 130 முட்டைகளை இடும்.
5. வெப்பமான பருவத்தில் ஒரு ஈ 30 நாட்கள் வாழும். ஆனால், சராசரியாக ஈக்கள் ஐந்து மாதங்கள் வரை வாழக்கூடியவை.
6. ஈக்களின் உணவு முழுவதுமே நீர்தான். அனைத்து உணவுகளையுமே ஈக்கள் நீராகவே அருந்துகின்றன.
7. ஈக்கள் சாப்பிடுவதற்கும், ருசி காண்பதற்கும் தன் கால்களையே பயன்படுத்துகின்றன.
8. ஈக்கள் தம் உணவை மணத்தை வைத்துதான் கண்டுபிடிக்கின்றன.
9. ஈக்கள் அனைத்துத் திசைகளிலும் நடக்கக்கூடியவை: நேராக, தலைகீழாக, பக்கவாட்டில்.
10. ஈக்கள் மிக வேகமாகச் செயல்படக்கூடியவை. நம் மூளை ஒரு விநாடிக்குள் 60 படங்களை ப்ராஸஸ் செய்கிறது. ஆனால் ஈ, ஒரு விநாடிக்கு 250 காட்சிகளை ப்ராஸஸ் செய்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!
**- ஆஸிஃபா**�,”