Nஆளுநரைச் சந்தித்தது குற்றமா?

public

டி.டி.வி.தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏக்களான தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல் இருவரும் நேற்று (ஆகஸ்ட் 30) சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டி அளித்தனர்.

அப்போது தங்க தமிழ்ச்செல்வன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “நீங்கள் ஆளுநரைப் போய் எப்படி சந்திக்கலாம், பத்திரிகையாளர்களை, ஊடகங்களை எப்படி சந்திக்கலாம் என்று விளக்கம் கேட்டு அரசு கொறடா எங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். ஒரு எம்.எல்.ஏ. ஆளுநரை சந்திக்கக் கூடாது என்று ஒரு கொறடா எப்படி சொல்ல முடியும்? ஆகையால் நீங்களே சொல்லுங்கள், நாங்கள் ஆளுநரைச் சந்தித்தது, பத்திரிகையாளர்களை, ஊடகங்களை சந்தித்தது எவ்வகையில் குற்றம் என்று நீங்களே கூறுங்கள்” என்று தங்க தமிழ்ச்செல்வன் கேள்வி எழுப்பினார்.

தங்க தமிழ்ச்செல்வன் பேசிக்கொண்டிருக்கும்போதே, இடையில் பெரம்பூர் எம்.எல்.ஏ. வெற்றிவேல் செய்தியாளர்களிடம் பேசுகையில், “நீங்கள் ஊழல் செய்தீர்கள் என்று சொல்வது குற்றமா? நாங்கள் முதலமைச்சரை மாற்ற வேண்டும் என்று சொல்வது குற்றமா? அவையெல்லாம் குற்றமாக இருந்தால் அந்தக் குற்றத்தை நாங்கள் திரும்பத்திரும்ப செய்வோம்” என்று கூறினார்.

இதையடுத்து பேசிய தங்க தமிழ்ச்செல்வன், “ஆளுநரைச் சந்தித்ததற்காக நாங்கள் ஒரு விளக்கம் அளித்துள்ளோம். இரண்டு நாளில் நல்ல முடிவு தெரியும் என்று எதிர்பார்க்கிறோம். நாங்கள் அனைவரும் குடியரசுத் தலைவரைச் சந்தித்து மேல்முறையீடு செய்வதற்குத் தயாராக இருக்கிறோம். நாங்கள் அளித்த விளக்கத்தில், உங்களுடைய நோட்டீஸ் எந்தவிதத்திலும் எங்களைக் கட்டுப்படுத்தாது. சட்டப்படியும் முறைப்படியும் நோட்டீஸ் அனுப்பவில்லை என்று தெரிவித்துள்ளோம். நாங்கள் எங்களுடைய துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனைச் சந்தித்து ஆலோசனை நடத்தி அடுத்த கட்ட நடவடிக்கையை நோக்கி நகர்வோம்” என்று கூறினார்.

மேலும், தங்க தமிழ்ச்செல்வன் கூறுகையில், “நாங்கள் மொத்தம் 40 எம்.எல்.ஏக்கள் என்றாலும் ஆளுநரைச் சந்தித்து கடிதம் அளித்தோம் என்று 19 எம்.எல்.ஏக்கள்மீது நடவடிக்கை எடுக்கிறார்கள். இது சரியென்றால், இதற்கு முன்பு அரசுக்கு எதிராக சட்டமன்றத்தில் வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள்மீது கொறடா என்ன நடவடிக்கை எடுத்தார்? அவர்கள்மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? கட்சி சின்னத்தை முடக்கிய ஓ.பி.எஸ். தன்னை முதலமைச்சராக்கிய சின்னம்மா (சசிகலா) குடும்பத்தையே கட்சியை விட்டு ஒதுக்க வேண்டும் என்று கூறும் எடப்பாடி பழனிசாமி இரண்டு பேரும் செய்தது துரோகம். இந்த இரண்டு பேரையும் மாற்ற வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை” என்று தெரிவித்தார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *