இந்து கடவுள்களை அவமதித்த விவகாரம் தொடர்பான உலகின் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் மீது நொய்டா காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அமேசான் இ-காமர்ஸ் தளத்தில் விற்பனைக்கு பட்டியலிடப்பட்டிருந்த காலணிகள், வீட்டு வாசலில் வைக்கப்படும் மேட்டுகள், கழிவறைகளில் பயன்படுத்தப்படும் கவர்கள் போன்றவற்றில் விநாயகர் உள்ளிட்ட இந்துக் கடவுள்களின் படம் பொறிக்கப்பட்டிருந்தது. இதற்கு இந்து அமைப்புகளிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்து மதக் கடவுள்களை அவமதிக்கும் விதமாக அமேசான் நிறுவனம் இப்பொருட்களை விற்பனை செய்வதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.
பாய்காட் அமேசான் என சமூக வலைதளங்களிலும் எதிர்ப்பு தெரிவித்து பதிவுகள் குவிந்தன. நாடு முழுவதும் இதுவரையில் 58 இடங்களில் அமேசான் நிறுவனத்துக்கு எதிராக புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, நொய்டாவில் அமேசான் நிறுவனத்தின் மீது இந்திய தண்டனைச் சட்டம் 153ஆவது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வட்ட அதிகாரி பியூஷ் குமார் தெரிவித்துள்ளார். இரு குழுக்களிடையே மத ரீதியாக பகைமையை துண்டுவது தொடர்பான வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும், இதுகுறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
விகாஸ் மிஸ்ரா என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ”வெளிநாட்டைச் சேர்ந்த இந்நிறுவனம், தன்னுடைய தளத்தில் இதுபோல இந்துக்களின் நம்பிக்கைக்கு எதிராகப் பொருட்களை அடிக்கடி பட்டியலிடுகிறது. இதனால் நாட்டில் மத ரீதியான பதற்றம் உண்டாகிறது. எனவே இந்நிறுவனத்துக்கு கட்டுப்பாடு விதிக்கும் வகையில் வலிமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
அமேசான் நிறுவனம் இந்த சர்ச்சைகளையடுத்து அப்பொருட்களைப் பட்டியலிலிருந்து நீக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
.
.
**
மேலும் படிக்க
**
.
**
[விமர்சனம்: மிஸ்டர் லோக்கல்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/18/7)
**
.
**
[டிஜிட்டல் திண்ணை: கெஞ்சல், மிரட்டல்- கமல் வெளியிடாத ரகசியத் தகவல்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/84)
**
.
**
[ஸ்பெயின் ரசிகர்களைக் கவர்ந்த தனுஷ்](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/53)
**
.
**
[தினகரனுக்கு எடப்பாடி சொன்ன செய்தி!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/27)
**
.
**
[இன அழிப்புப் போரில் இறந்தோருக்கு அஞ்சலி](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/18/24)
**
.
.
�,”