nஅன்புமணிக்கு ராஜ்யசபா பதவியா?: ஆனந்தராஜ்

Published On:

| By Balaji

மக்களவைத் தேர்தலில் அதிமுக-பாமக கூட்டணி அமைத்துத் தேர்தலை சந்தித்தன. கூட்டணியில் பாமகவுக்கு 7 மக்களவை தொகுதிகளும், 1 மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் ஒதுக்கப்பட்டது. தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் தருமபுரி தொகுதியில் பாமக சார்பில் போட்டியிட்ட அன்புமணி ராமதாஸ் தோல்வியைத் தழுவினார். இதனையடுத்து பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 1 மாநிலங்களவை உறுப்பினர் பதவியின் மூலம் அவர் எம்.பி.யாகலாம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் இன்று (மே 27 ) செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவைச் சேர்ந்தவரும் நடிகருமான ஆனந்தராஜ், “அதிமுகவின் வாக்கு வங்கி என்பது அதிமுகவுக்காக தமிழக மக்கள் தந்தது. அதனை வேறு கட்சிகளுக்கு தாரைவார்த்துக் கொடுக்கும் உரிமை யாருக்கும் கிடையாது. அன்புமணி ராமதாஸுக்கோ, பாமகவில் ஒருவருக்கோ ராஜ்யசபா உறுப்பினர் பதவி தந்ததை வாபஸ் பெற வேண்டும். ஏனெனில் ராஜ்யசபா உறுப்பினர் என்பது அதிமுகவின் உரிமை. கட்சிக்காக உழைத்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களுக்குத்தான் அது கிடைக்க வேண்டும். வேறு யாருக்கும் தாரைவார்த்துக் கொடுக்கக் கூடாது” என்று வலியுறுத்தினார்.

ஜெயலலிதாவின் கட்டளையை ஏற்று 2014 மக்களவைத் தேர்தலில் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்தேன். ஆனால் இந்த முறை நான் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை. எனவே அதிமுகவின் தோல்வியில் எனக்கு பங்கில்லை என்று குறிப்பிட்டவர், “இதுவரை நான் அதிமுகவிலிருந்து விலகுவதாக எங்கேயும் சொல்லவில்லை. இந்த நிமிடம் வரை அதிமுகவில்தான் இருந்துவருகிறேன். நாளை என்னுடைய நிலைப்பாடு எப்படி இருக்க வேண்டும் என்பதை சிந்திக்க வேண்டும்” என்றும் தெரிவித்தார்.

.

.

**

மேலும் படிக்க

**

.

.

**

[அமமுக தோல்விக்கான காரணங்கள்: அறிக்கை அனுப்பிய நிர்வாகிகள்!](https://minnambalam.com/k/2019/05/27/15)

**

.

**

[தலித்திய தனிமைப்படுதல் என்னும் அபாயம்!](https://minnambalam.com/k/2019/05/27/17)

**

.

.

**

[ரயில்வே இணையமைச்சர் ஆகிறார் ரவீந்திரநாத்?](https://minnambalam.com/k/2019/05/26/55)

**

.

**

[அதிமுகவில் ராஜ்யசபா ரேஸ்!](https://minnambalam.com/k/2019/05/26/52)

**

.

.

**

[வரப் போகும் நாட்கள் கடினமானவை: சோனியா](https://minnambalam.com/k/2019/05/27/18)

**

.

.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share