nஅந்நிய முதலீட்டை ஈர்க்கத் தவறிய தமிழகம்!

public

2016-17 நிதியாண்டில் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள அந்நிய நேரடி முதலீடுகள் 50 சதவிகிதம் சரிவடைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

2016 ஏப்ரல் முதல் 2017 மார்ச் வரையிலான 12 மாதங்களில் தமிழக மாநிலத்தில் 2.21 பில்லியன் டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.14,003.66 கோடி) மதிப்பிலான அந்நிய முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால் அதற்கு முந்தைய ஆண்டில் (2015-16) 4.52 பில்லியன் டாலர் (ரூ.28,640.98 கோடி) முதலீடுகளைத் தமிழகம் ஈர்த்திருந்தது. எனவே தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள அந்நிய நேரடி முதலீடுகளில் 50 சதவிகிதம் சரிவு ஏற்பட்டுள்ளது. இவ்விவரங்கள் சமீபத்தில் நிறைவுற்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் சமர்ப்பித்த அறிக்கை வாயிலாக நமக்குத் தெரிய வருகிறது. அந்நிய நேரடி முதலீடுகள் பற்றி எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை இணையமைச்சரான சி.ஆர்.சவுதரி, ரிசர்வ் வங்கியிடமிருந்து பெற்ற இவ்வரங்களைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

சென்னையிலுள்ள ரிசர்வ் வங்கியின் பிராந்திய அலுவலகம் சார்பாக சேகரிக்கப்பட்ட இவ்விவரங்களில், 2014-15 நிதியாண்டில் தமிழகம் 3.81 லட்சம் கோடி (ரூ.24,138.25 கோடி) அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்த்துள்ளதாகவும் தெரிய வருகிறது. மேலும், நடப்பு நிதியாண்டின் செப்டம்பர் மாதம் வரையில் 2.16 லட்சம் கோடி (ரூ.13,682.52 கோடி) டாலர் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த அறிக்கையில் துறை வாரியாக எவ்வளவு முதலீடுகள் ஈர்க்கப்பட்டன என்ற விவரங்கள் கிடைக்கவில்லை. எனினும், ஒவ்வொரு மாநிலமும் தனது முந்தைய ஆண்டின் முதலீட்டு அளவு மிஞ்சியதாகத் தெரிகிறது. இருப்பினும், 2015-16 நிதியாண்டில் ஈர்க்கப்பட்ட முதலீட்டு அளவை அடைவது சற்று கடினம் தான்.

கோடாக் இன்ஸ்டிடியூஷனல் ஈக்விட்டீஸ் ஆய்வுப்படி, 2016ஆம் ஆண்டில் இந்தியா ஈர்த்த 44 பில்லியன் டாலர் (ரூ.2,78,674 கோடி) முதலீடுகளில் தமிழகத்தின் பங்கு வெறும் 2.9 சதவிகிதம் மட்டுமே. இது அதற்கு முந்தைய மூன்று வருடங்களில் மிகவும் பின்தங்கிய அளவாகும்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.