அணுக்கழிவு மையம் அமைப்பதால் கதிர்வீச்சு அபாயம் ஏற்படாது என்று விளக்கம் அளித்துள்ளது கூடங்குளம் அணுமின் நிலையம்.
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் அணு மின் நிலையத்தில் முதல் இரண்டு அலகுகள் செயல்பாட்டில் உள்ளன. இந்த நிலையில், கூடங்குளத்தில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டது மத்திய அரசு. இதற்கு, தமிழகத்திலுள்ள மாநிலக் கட்சிகள், அமைப்புகள் மற்றும் கூடங்குளம் வட்டாரத்தைச் சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக, இன்று ராதாபுரத்தில் நடைபெறவிருந்த நாம் தமிழர் கட்சியின் போராட்டத்துக்கு அனுமதி மறுத்துள்ளது காவல் துறை. இதையடுத்து, இந்த போராட்டம் பாளையங்கோட்டைக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று (ஜூன் 14) கூடங்குளம் அணுமின் நிலையம் சார்பில் அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைப்பதால் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உ ள்ள அணு உலைகள் ஒன்று மற்றும் இரண்டாம் அலகுகளின் பயன்படுத்தப்பட்ட எரிபொருட்கள் மட்டுமே இந்த அணுக்கழிவு மையத்தில் சேமிக்கப்படும் என்றும், மற்ற அணுக்கழிவு மையக் கழிவுகள் இங்கு கொண்டுவரப்படாது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“சேமித்து வைக்கப்படும் அணுக்கழிவுகளால் கதிர்வீச்சு அபாயம் ஏற்படாது. அவற்றை எதிர்காலத்தில் மற்ற உபயோகங்களுக்குப் பயன்படுத்தலாம். அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிமுறைகளைப் பின்பற்றி இந்த அணுக்கழிவு மையம் அமையவுள்ளது. இதனால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலம், நீர், காற்று மாசுபடாது. கூடங்குளம் வட்டாரத்தில் இப்போது செய்யப்பட்டு வரும் பணிகளைத் தொடரலாம். அணுக்கழிவு மையம் அமைப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கையில் எவ்விதப் பாதிப்பும் ஏற்படாது” என்று அதில் கூறப்பட்டுள்ளது.
கூடங்குளம் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைப்பது தொடர்பாக, வரும் ஜூலை 10ஆம் தேதியன்று கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் இந்த விளக்கத்தை வெளியிட்டுள்ளது கூடங்குளம் அணு உலை மையம்.
**
மேலும் படிக்க
**
**[டிஜிட்டல் திண்ணை: எடப்பாடியை டென்ஷன் ஆக்கிய தினகரன்- வாய்ப்பூட்டு பின்னணி!](https://minnambalam.com/k/2019/06/13/76)**
**[மூடப்படும் அருவிகள்: கேரளத்தில் பண மழை!](https://minnambalam.com/k/2019/06/14/20)**
**[பாக்கியராஜ் அணிக்கு விஜயகாந்த் ஆதரவு!](https://minnambalam.com/k/2019/06/13/44)**
**[அதிமுக: அந்த 11 பேர் குழுவில் யார் யார்?](https://minnambalam.com/k/2019/06/13/22)**
**[பசங்கதான் பொண்ணுங்கள தெரிஞ்சிக்கணும்: அஜித்](https://minnambalam.com/k/2019/06/13/70)**
�,”