ாலை நேர உணவுக்கு என்ன செய்வது என்ற குழப்பம் பலருக்கும். சிற்றுண்டிக்கு பதில் வழக்கமான சூப் செய்து அசத்துவதைவிட கொஞ்சம் வித்தியாசமாகச் செய்தால் சுவையும் ஆரோக்கியமும் பன்மடங்கு கூடும். அதற்கு இந்த மட்டன் முருங்கைக்கீரைச் சாறு உதவும்.
என்ன தேவை?
எலும்புள்ள மட்டன் துண்டுகள் – 150 கிராம்
முருங்கைக் கீரை – ஒரு கைப்பிடி அளவு
கேரட் – ஒன்று
தக்காளி – 2
பிரிஞ்சி இலை – ஒன்று
மிளகுத்தூள் – ஒன்றரை டீஸ்பூன்
பெரிய வெங்காயம் – ஒன்றில் பாதி
சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன்
பச்சை மிளகாய்- 2
இஞ்சி – ஒரு துண்டு
பூண்டு – 6 பல்
மல்லித்தூள் (தனியாத்தூள் ) – ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
தண்ணீர் – ஒன்றரை லிட்டர்
எப்படிச் செய்வது?
மட்டனை சற்று பெரிய துண்டுகளாக நறுக்கி, சுத்தம் செய்து கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை, பிரிஞ்சி இலை, சேர்த்து நிறம் மாற வதக்கி, முருங்கைக்கீரையைச் சேர்த்து வதக்கவும்.
இத்துடன் மீடியம் சைஸில் நறுக்கிய கேரட், தக்காளி சேர்த்து வதக்கவும். இதில், சீரகத்தூள், மிளகுத்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), மஞ்சள்தூள், உப்பு சேர்த்து மசாலா வாசனை போகும்வரை வதக்கி, தண்ணீர் ஊற்றி மட்டன் துண்டுகளைச் சேர்த்து வேகவிடவும். மட்டன் வெந்ததும் கொத்தமல்லித்தழையைத் தூவி பரிமாறவும்.