ரிலாக்ஸ் டைம்: மஷ்ரூம் வடை!

Published On:

| By Balaji

தமிழர்களின் பெரும்பாலான விழாக்களிலும் சடங்குகளிலும் பரிமாறப்படும் வடை, ரிலாக்ஸ் டைமுக்கும் ஏற்றது. வடை – டீ காம்பினேஷன் பலருக்கும் விருப்பமான ஒன்றாக இருக்கும் நிலையில், இந்த மஷ்ரூம் வடை சுவையில் ரிலாக்ஸ் டைமை மேலும் சிறப்பாக்கும்.

**எப்படிச் செய்வது?**

250 கிராம் பட்டன் காளானைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். சிறிதளவு மல்லித்தழையைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய காளானை போட்டு அதனுடன் ஒரு டீஸ்பூன் சோம்பு, ஐந்து டீஸ்பூன் தேங்காய்த்துருவல், 100 கிராம் பொட்டுக்கடலை மாவு, 50 கிராம் கடலை மாவு, நறுக்கிய மல்லித்தழை, சுவைக்கேற்ப மிளகாய்த்தூள், தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து சிறிதளவு தண்ணீர்விட்டு வடை மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும். தேவைப்பட்டால் கடலை மாவு சேர்த்து கொள்ளலாம். கடைசியாக இரண்டு பிரெட் ஸ்லைஸை உதிர்த்து அந்த பிரெட் தூளையும் சேர்த்து பிசைந்துகொள்ளவும். கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை வடைகளாகத் தட்டி போட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுத்து பரிமாறவும்.

**சிறப்பு**

மஷ்ரூமில் மிக அதிகமான புரதச்சத்து உள்ளதால் இந்த வடை குழந்தைகளுக்கு உகந்தது.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share