கீச்சன் கீர்த்தனா: மஷ்ரூம் கிரேவி!

public

ஓடியாடி உழைத்து வீட்டுக்கு வரும் மந்தமான மாலை வேளைகளில் காரசாரமாக, குறுகிய நேரத்தில் காளானை வைத்து இந்த மஷ்ரூம் கிரேவி செய்து பூரியுடன் தொட்டுச் சாப்பிட்டால், சூப்பர் சுவையில் அசத்தும்.

என்ன தேவை?

மஷ்ரூம் – 150 கிராம்

தேங்காய்த் துருவல் – முக்கால் கப்

சப்ஜி மசாலாத்தூள் – 4 டீஸ்பூன்

எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

காளானை லேசாகக் கழுவிவிட்டு, வெள்ளைத் துணியால் துடைத்துக் கொள்ளவும். பின்னர் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். வெங்காயத்தையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். சிறிய மிக்ஸி ஜாரில் மிளகை கொரகொரப்பாகப் பொடித்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு நன்கு சூடாக்கி, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். பொன்னிறமாக வதங்கியதும் நறுக்கிய காளானைச் சேர்த்துக் கைவிடாமல் வதக்கவும். காளான் லேசாக நிறம் மாறும்போது தேவையான அளவு உப்பு சேர்த்து மீண்டும் நன்கு கைவிடாமல் வதக்கவும். காளான் நன்கு சுருங்கி வதங்கியதும் பொடித்த மிளகைச் சேர்த்துப் புரட்டி இறக்கவும். சூடாகப் பரிமாறவும்.

நேற்றைய ரெசிப்பி: சோயா பீன்ஸ் மசாலா

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.