Moringaceae என்ற தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த முருங்கையின் தாவரவியல் பெயர், Moringa Oleifera. பல வகைகளில் பயன் தரும் முருங்கைக்கு நம் சித்த மருத்துவம் கொடுத்திருக்கும் பெயர் ‘பிரம்ம விருட்சம்.’ ‘எளியவர்களின் கற்பகத்தரு’ என்று தமிழ் இலக்கியம் முருங்கையைக் கொண்டாடுகிறது. சகல சத்துகளும்கொண்ட ‘இயற்கை டானிக்’ என்று அறிவியல் வியக்கிறது. அப்படிப்பட்ட முருங்கையிலைக் கொண்டு முருங்கைக்கீரை வடை செய்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்.
**என்ன தேவை?**
கடலைப்பருப்பு – ஒரு கப்
முருங்கைக்கீரை (இலைகளை உருவி எடுக்கவும்) – 2 கப்
வெங்காயம் (பெரியது) – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கவும்)
பூண்டு – 4 பல் (பொடியாக நறுக்கவும்)
சீரகம் – அரை டீஸ்பூன் (விருப்பப்பட்டால்)
அரிசி மாவு – ஒரு டேபிள்ஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
**எப்படிச் செய்வது?**
கடலைப்பருப்பைக் கழுவி 2 மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு நீரை வடித்து, சீரகம் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். இதனுடன் முருங்கையிலை, வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, அரிசி மாவு, உப்பு சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும். கடாயில் எண்ணெயைக் காயவிட்டு, நன்கு சூடானதும் மாவை வடைகளாக தட்டிப் போட்டுப் பொன்னிறமாக, மொறுமொறுப்பாகப் பொரித்தெடுக்கவும். சட்னி அல்லது டீயுடன் பரிமாறவும்.
**[நேற்றைய ஸ்பெஷல்: முருங்கையிலை தட்டை](https://minnambalam.com/public/2021/04/26/1/Muranga-ilai-thattai) **
.�,