கோடைக்காலத்தில் உடலுக்கு நீர்ச்சத்து கிடைக்கவும், வறண்ட சருமத்தைப் பொலிவாக்கவும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் இப்போது பரவலாகக் கிடைக்கும் முலாம், தர்பூசணி பழங்கள் கொண்டு இந்த ஜூஸ் செய்து அருந்தலாம்.
**எப்படிச் செய்வது?**
தலா ஒரு கப் தோல் சீவி, விதை நீக்கப்பட்ட தர்பூசணி, முலாம்பழத் துண்டுகளுடன் தேவையான அளவு. தேன் சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து, ஐஸ்கட்டிகள் சேர்த்து அருந்தவும்.
**சிறப்பு**
உடலுக்குக் குளுமையைத் தரும். மலச்சிக்கல் நீங்க, ஜீரண மண்டலம் சீராகச் செயல்பட, உடலின் அமிலத்தன்மையைக் கட்டுப்படுத்த உதவும்.
ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இந்த ஜூஸில் அதிக அளவு இருப்பதால், வளர்சிதை மாற்றம் சீராக நடக்க உதவும். ரத்த அழுத்தம் சீராகவும், மன அழுத்தம் நீங்கவும், இதய நோய்களில் இருந்து தப்பிக்கவும் இந்த ஜூஸை அடிக்கடி அருந்தலாம்.�,