Zசென்னையில் மொபைல் கிளினிக்குகள்!

Published On:

| By Balaji

சென்னை மாநகரத்தில் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதை ஒட்டி சென்னைக்கு என்று ஸ்பெஷல் டூட்டி பார்ப்பதற்காக டாக்டர்களும், நர்ஸுகளும், மருத்துவப் பணியாளர்களும் தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து வரவழைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இதுபற்றி [15 நாள் சென்னை டூட்டி](https://minnambalam.com/public/2020/06/12/60/15days-chennai-%20duty-health-workers-gathered) என்ற தலைப்பில் மின்னம்பலத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். இந்த சுகாதாரப் பணியாளர்கள் மூலமாக சென்னை மாநகரத்தில் கொரோனா அதிகமுள்ள கட்டுப்பாட்டுப் பகுதிகளை முதன்மைப்படுத்தி, தெர்மல் ஸ்கேனிங் உள்ளிட்ட சோதனைகளைச் செய்வதற்கான மொபைல் க்ளினிக் திட்டம் இப்போது தீவிரமாக்கப்பட்டுள்ளது.

“சென்னை மாநகரவாசிகளின் எண்ணிக்கை தோராயமாக 87 லட்சம் பேர் என்று கணக்கிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு சுகாதார ஊழியரும் ஒரு நாளைக்கு 150 வீடுகளில் ஸ்கேன் டெஸ்ட் எடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஆயிரக்கணக்கான சுகாதாரப் பணியாளர்கள் முடுக்கிவிடப்பட்டிருக்கிறார்கள். இந்த சோதனைகளின் மூலம் அதிக எண்ணிக்கையில் காய்ச்சல் இருப்போர் கண்டறியப்படும் பகுதிகளுக்கு மொபைல் மருத்துவர்கள் உடனடியாக அனுப்பி வைக்கப்படுகிறார்கள். சுகாதாரப் பணியாளர்கள் தொகுத்த தகவல்களின் அடிப்படையில் மொபைல் கிளினிக்குகளின் அடுத்த கட்ட பணி இருக்கும்.

கடந்த வெள்ளிக்கிழமை ரிப்பன் மாளிகையில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில்… பிற மாவட்டங்களில் இருந்து வந்த மருத்துவர்கள், நர்ஸுகள், சுகாதாரப் பணியாளர்களுக்கான் பணி ஒதுக்கீடு பற்றி ஆலோசிக்கப்பட்டது. சென்னையில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டிருப்போர் மீதான கண்காணிப்பை அதிகப்படுத்த இந்த மருத்துவர்களையும், பணியாளர்களையும் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது.

இதன்படி ஜூன் 12 ஆம் தேதி முதல் சென்னையின் 15 மண்டலங்களிலும் 173 மொபைல் மருத்துவமனை அடங்கிய ஆம்புலன்ஸுகள் களமிறக்கப்பட்டுள்ளன. இவற்றில் டாக்டர்கள், சுகாதாரப் பணியாளர்கள், நர்ஸுகள் இருப்பார்கள். வெப்ப சோதனை நடத்தும் பணியாளர்கள் தெரிவிக்கும் தகவல்களுக்கு ஏற்ப அந்த பகுதிகளுக்கே சென்று மொபைல் ஆம்புலன்ஸ் சிகிச்சைகளை வழங்கும்.

**-வேந்தன்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share