21 ஆண்டுகளுக்குப் பிறகு மிஸ் யூனிவர்ஸ் வென்ற இந்திய அழகி!

Published On:

| By Balaji

ஒவ்வோர் ஆண்டும் உலக அழகிப்போட்டி, பிரபஞ்ச அழகிப் போட்டி நடத்தப்பட்டு வருகின்றன. லாரா தத்தா கடைசியாக 2001ஆம் ஆண்டு மிஸ் யூனிவர்ஸ் பட்டம் வென்றார். அதன்பிறகு, கடந்த 20 வருடங்களாக எந்த இந்தியப் பெண்களுக்கும் இந்தப் பட்டம் கிடைக்கவில்லை. இந்த நிலையில், 2021ஆம் ஆண்டுக்கான மிஸ் யூனிவர்ஸ் பட்டத்தை இந்தியாவைச் சேர்ந்த 21 வயது ஹர்னாஸ் கவுர் சாந்து வென்றிருக்கிறார். இவர் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்.

இஸ்ரேலின் எய்லட் நகரில் பிரபஞ்ச அழகிக்கான போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 80 அழகிகள் மிஸ் யூனிவர்ஸ் பட்டத்துக்கான போட்டியில் பங்கேற்றனர்.

இந்தியா சார்பில் லாரா தத்தா 2000ஆம் ஆண்டில் மிஸ் யூனிவர்ஸ் பட்டத்தை வென்றிருந்தார். அதன்பின் 20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியப் பெண் பிரபஞ்ச அழகியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார் ஹர்���ாஸ். மெக்சிகோவைச் சேர்ந்த முன்னாள் பிரபஞ்ச அழகி ஆண்ட்ரியா மெசா, ஹர்னாஸ் கவுர் சாந்துவுக்கு வாகையைச் சூட்டினார்.

சகப் போட்டியாளர்கள் ஹர்னாஸிடம், “நீங்கள் இன்றைய தலைமுறையை சேர்ந்த இளம் பெண்களுக்கு அவர்கள் சந்திக்க கூடிய மன அழுத்தங்களுக்கு என்ன அறிவுரை சொல்ல விரும்புகிறீர்கள்?” என்று கேட்டனர்.

அதற்கு ஹர்னாஸ் “இன்றைய இளம் தலைமுறையினர் முதலில் தன்னை தானே நம்ப வேண்டும். எப்போது அவர்கள் தனித்தன்மை வாய்ந்தவர்கள் என்று நம்புகிறார்களோ அப்போதே அவர்கள் அழகாக மாறிவிடுவார்கள். உங்களை மற்றவர்களோடு ஒப்பிடாதீர்கள். இது உங்கள் வாழ்க்கை, உங்களுக்காக நீங்கள்தான் வெளியே வந்து பேச வேண்டும். ஏனெனில் நீங்கள்தான் உங்களுக்குத் தலைவி. நமக்காக நாம்தான் குரல் கொடுக்க வேண்டும். நான் என் மீது நம்பிக்கை வைத்தேன். அதனால்தான் நான் இன்று இந்த இடத்தை அடைந்துள்ளேன்” என்று கூ��ியுள்ளார்.

ஹர்னாஸ் கவுர் கடந்த 2017ஆம் ஆண்டு மிஸ் சண்டிகர் எனும் பட்டம் பெற்றவர். 2019இல் ஃபெமினா மிஸ் இந்தியா பஞ்சாப் பட்டத்தை வென்றார். மேலும் பல்வேறு அழகிப் போட்டிகளில் பங்கேற்று பட்டங்களையும் வென்றுள்ளார்.

பஞ்சாபில் பிறந்து வளர்ந்த ஹர்னாஸ், சண்டிகரில் உள்ள ஷிவாலிக் பப்ளிக் பள்ளி மற்றும் பெண்களுக்கான முதுகலை அரசு கல்லூரி ஆகிய இரண்டிலும் பயின்றார். தற்போது பொது நிர்வாகத்தில் முதுகலைப் பட்டப்படிப்பைப் படித்து வருகிறார்.

இந்த நிலையில், பிரபஞ்ச அழகி பட்டம் வென்ற ஹர்னாஸ் கவுர் சாந்துக்கு [பிரதமர் மோடி வாழ்த்து](https://twitter.com/narendramodi/status/1470401430590689280) தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘பிரபஞ்ச அழகியாக பட்டம் வென்ற ஹர்னாஸ் சாந்துக்கு வாழ்த்துகள். மேலும், ஹர்னாஸின் எதிர்கால முயற்சிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்’ எ��ப் பதிவிட்டுள்ளார்.

**-ராஜ்**

.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share