கிச்சன் கீர்த்தனா: மினி இட்லி வித் தேங்காய்ப் பொடி!

Published On:

| By Balaji

�தமிழர்களின் பாரம்பர்ய உணவில் முதலிடம் இட்லிக்குத்தான். பண்டிகை நாளாக இருந்தாலும், வீட்டு விசேஷங்களானாலும், வார நாட்களானாலும் தட்டிலும் இலையிலும் முதல் மரியாதை இட்லிக்குத்தான். வயிற்றைத் தொந்தரவு செய்யாத எளிதில் ஜீரணமாகும் உணவு என்பதால் குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள் அனைவருக்கும் பரிந்துரைக்கப்படுவது இட்லிதான். அப்படிப்பட்ட இட்லியை சுவையுடன் செய்து வீட்டிலுள்ளவர்கள் மகிழ்விக்க இந்த மினி இட்லி வித் தேங்காய்ப் பொடி பெஸ்ட் சாய்ஸ்

**என்ன தேவை?**

இட்லி மாவு – 2 கப்

நல்லெண்ணெய் – தேவையான அளவு

**தேங்காய்ப் பொடி செய்ய**

தேங்காய்த் துருவல் – அரை கப்

காய்ந்த மிளகாய் – 3

உளுத்தம்பருப்பு – 3 டேபிள்ஸ்பூன்

எண்ணெய் – ஒரு டீஸ்பூன்

பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

**எப்படிச் செய்வது?**

வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் ஆகியவற்றைச் சேர்த்து வறுத்துத் தனியாக வைக்கவும். அதே வாணலியில் தேங்காய்த் துருவலைச் சேர்த்து நன்றாக வதக்கி எடுக்கவும். முதலில் வறுத்தவற்றை மிக்ஸியில் கொரகொரப்பாகப் பொடிக்கவும். அதனுடன் தேங்காய்த் துருவல், உப்பு சேர்த்து மேலும் இரண்டு சுற்று சுற்றி எடுக்கவும். தேங்காய்ப் பொடி தயார். மினி இட்லித் தட்டில் இட்லி மாவை ஊற்றி வேகவைத்து எடுக்கவும். இட்லிகள் சூடாக இருக்கும்போதே ஒவ்வொரு இட்லியின் மீதும் ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய்ப் பொடியைத் தூவி மேலே கால் டீஸ்பூன் நல்லெண்ணெயை ஊற்றிப் புரட்டவும்.

[நேற்றைய ரெசிப்பி: வெஜிடபிள் இட்லி!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/public/2021/07/26/1/vegetable-idly)

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share