wகிச்சன் கீர்த்தனா: சிறுதானிய சுரைக்காய் அடை

Published On:

| By Balaji

வைரஸ்களுக்கு எளிய இலக்கு நீரிழிவாளர்களும் என்பதை தற்போது நாம் அனுபவபூர்வமாக உணர்ந்துகொண்டிருக்கிறோம். எனவே, சரியான உணவுப் பழக்கத்துடன் சரியான உணவுகளையும் எடுத்துக்கொண்டால் நீரிழிவைக் கட்டுப்படுத்தலாம் என்பது நிச்சயம். கோடையுடன் கொரோனாவையும் எதிர்க்க சுவையான இந்த சிறுதானிய சுரைக்காய் அடை உதவும்.

**என்ன தேவை?**

திணை அரிசி – 100 கிராம்

வரகு அரிசி – 100 கிராம்

சுரைக்காய் – 150 கிராம் (துருவிக்கொள்ளவும்)

துவரம்பருப்பு – 100 கிராம்

கடலைப்பருப்பு – 100 கிராம்

சோம்பு, சீரகம் – தலா 2 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் – 7

மஞ்சள்தூள் – ஒரு டீஸ்பூன்

இஞ்சி – ஒரு சிறிய துண்டு

பெருங்காயம் – 2 டீஸ்பூன்

வெங்காயம் – 2 (நறுக்கவும்)

கொத்தமல்லி – சிறிதளவு

உப்பு – தேவைக்கேற்ப

**எப்படிச் செய்வது?**

திணை அரிசி, வரகு அரிசி, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு ஆகியவற்றை நான்கு மணி நேரம் ஊறவைக்கவும். ஊறிய அரிசி, பருப்புகளுடன் சோம்பு, சீரகம், காய்ந்த மிளகாய், உப்பு, மஞ்சள்தூள், நறுக்கிய இஞ்சி, பெருங்காயம் அனைத்தையும் சேர்க்கவும். அத்துடன் நறுக்கிய வெங்காயம், துருவிய சுரைக்காய், கொத்தமல்லி சேர்த்து தோசைக்கல்லில் வார்த்து எடுத்தால் சுவையான சிறுதானிய சுரைக்காய் அடை தயார்.

**[நேற்றைய சண்டே ஸ்பெஷல்: சுரைக்காய் குழம்பு](https://minnambalam.com/public/2021/04/19/1/suraikai-kulambu)**

.�,