|கிச்சன் கீர்த்தனா: கம்பு – தேங்காய்ப் பணியாரம்

Published On:

| By Balaji

இதுவரை இட்லி மாவிலும், கோதுமை மாவிலும் மட்டுமே குழிப்பணியாரத்தை ருசித்தவர்களுக்குச் சற்று வித்தியாசமான சுவையில் சத்துகள் நிறைந்த இந்த கம்பு – தேங்காய்ப் பணியாரம் செய்து கொடுங்கள். விரும்பி சாப்பிடுவார்கள். இன்னும் கொஞ்சம் கேட்பார்கள்.

**என்ன தேவை?**

கம்பு மாவு – ஒரு கப்

பச்சரிசி – ஒரு கப்

உளுந்து – மூன்றில் ஒரு பங்கு கப்

தேங்காய்த்துருவல் – கால் கப்

சமையல் சோடா – ஒரு சிட்டிகை

உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

**எப்படிச் செய்வது?**

பச்சரிசி, உளுந்து இரண்டையும் கழுவி, ஒன்றாகக் கலந்து இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். கம்பு மாவை சிறிதளவு தண்ணீரில் தனியே கரைத்து ஊறவிடவும். பின்னர் தேங்காய்த்துருவல், ஊறவைத்த அரிசி, பருப்பு, கம்பு மாவுடன், தேவையான அளவு தண்ணீர்விட்டு, தோசை மாவுப் பதத்துக்கு அரைக்கவும். இதில் உப்பு கலந்து ஒரு மணி நேரம் வைத்திருக்கவும். இத்துடன் சமையல் சோடா கலந்துவைக்கவும். குழிப்பணியாரக் கல்லைக் காயவைத்து, ஒவ்வொரு குழியிலும் அரை டீஸ்பூன் எண்ணெய்விட்டு லேசாக காய்ந்ததும், அரை கரண்டி மாவை ஊற்றி ஒரு நிமிடத்தில் திருப்பி விடவும். மிதமான தீயில் வைத்து நன்கு வெந்தவுடன் பணியாரங்களை எடுத்துப் பரிமாறவும்.

**[நேற்றைய ரெசிப்பி: ராகி இனிப்புப் பணியாரம்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/public/2021/06/16/1/raggi-sweet-receipe)**

.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share