தற்போதைய சூழ்நிலையில் கொரோனாவை எதிர்க்க காய்கறிகளுடன் சேர்ந்த உணவு வகைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த மில்க் வெஜ் சூப் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் புத்துணர்ச்சியையும் அளிக்கும்.
**எப்படிச் செய்வது?**
வெந்நீரில் சிறிதளவு உப்பு சேர்த்து, அதில் இரண்டு பெரிய துண்டுகள் காலிஃபிளவரைப் போட்டு 10 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். பிறகு, காலிஃபிளவரை கழுவி, சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். கேரட் ஒன்று, பீன்ஸ் ஆறு, வெங்காயம் ஒன்று ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் நீர் விட்டு நறுக்கிய காலிஃபிளவர், கேரட், பீன்ஸ், வெங்காயம், தேவையான அளவு உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து, வெந்ததும் ஒரு டேபிள்ஸ்பூன் இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து, மேலும் சில நிமிடங்கள் கொதிக்கவிடவும். ஒரு கப் பாலில் ஒரு டேபிள்ஸ்பூன் சோள மாவைக் கரைத்து ஊற்றி, மேலும் சில நிமிடங்கள் கொதித்ததும் இறக்கி, இரண்டு டீஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்துப் பரிமாறவும்.
**சிறப்பு**
வைட்டமின்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது. சிறிதளவு புரதமும் உள்ளது. இது மூளை செல்களைத் தூண்டி சுறுசுறுப்புடன் செயல்பட வைக்கும். நினைவுத்திறனை மேம்படுத்தும். ரத்தம் உறைதல் பிரச்சினையைக் கட்டுப்படுத்தும்.�,