ரிலாக்ஸ் டைம்: மில்க் கோகோனட் பால்ஸ்!

public

வீட்டிலேயே சுடச்சுட, வெரைட்டியான நொறுக்குத் தீனிகளைச் செய்து ருசிப்பது தனி இன்பம். அதுவும் ரிலாக்ஸ் டைமில் மணக்கும் உணவுகளைச் சாப்பிடுவது தனி சுகம். அதற்கு இந்த மில்க் கோனோட் பால்ஸ் உதவும்

எப்படிச் செய்வது?

அரை கப் கெட்டி அவலை தண்ணீரில் ஐந்து நிமிடம் ஊற வைக்கவும். தண்ணீரை வடியவிட்டுப் பிழியவும். அடி கனமான பாத்திரத்தில் ஒரு லிட்டர் பாலுடன், ஒரு கப் தேங்காய்த்துருவல், அவல் சேர்த்துக் கிளறவும். வெந்ததும் ஒரு கப் சர்க்கரை, ஒரு டேபிள் ஸ்பூன் நெய், ஒரு டீஸ்பூன் ஏலக்காய்த்தூள் சேர்த்து ஒரு கொதிவிட்டு நன்கு கிளறி கெட்டியானதும் இறக்கவும். கையில் நெய் தடவிக்கொண்டு உருண்டைகளாக உருட்டவும். ஒவ்வோர் உருண்டையின் மீதும் கிராம்பு குத்தி அலங்கரித்துப் பரிமாறவும்.

சிறப்பு

கால்சியம் சத்து நிறைந்த இந்த கமகம பால்ஸ் அனைவருக்கும் ஏற்றது. எளிதில் ஜீரணமாகக்கூடியது.

சாக்லேட் பால்ஸ்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0