cஇந்த அரியரை தெரியுமா?: அப்டேட் குமாரு

Published On:

| By Balaji

கல்லூரி முதல்வர் கூட க்ளியர் பன்ன முடியாத  காலேஜ் பசங்களோட அரியர்ஸ் எல்லாம்  டாக்டர் எடப்பாடியார் க்ளியர் பண்றாரே. அதுக்காக அரியர்களின் அரசனே அப்படி இப்படினு பட்டங்கள தூக்கி கொடுத்துட்டு இருக்காங்க… இதெல்லாம் பேப்பர்ல படிச்சிட்டு இருந்த பக்கத்து வீட்டு அண்ணன் என்கிட்ட கேட்டாரு… பசங்களோட அரியர்ஸ் எல்லாம் கேக்காமலேயே க்ளியர் பண்றாரே… கேட்டு கேட்டு போராடியும் எங்க அரியர்ஸ க்ளியர் பன்ன மாட்றாரே அப்படினு கோபப்பட்டாரு… இத்தனைக்கும் அவரு காலேஜ் வாத்தியாரு.. பசங்களோட அரியர்ஸ பாக்க முடியவறவருக்கு, பாடம் நடத்துறவங்களோட அரியர்ஸ பாக்க முடியாதாயா….

நீங்க அப்டேட்ட படிங்க……

**விவாகா சுரேஷ்**

வசந்த் அண்ட் கோ பேரக் கேட்டாலோ படித்தாலோ

நம்ம மைண்ட்ல அப்டியே ரோலிங் சேர்ல திரும்பி சிரிப்பார்

#வி மிஸ் யூ அண்ணாச்சி

It will be cherishing in our memories Sir ! Thank you so much for your hard work towards our #Kanyakumari District development !#HVasanthakumar #எச்வசந்தகுமார்#வசந்தகுமார் pic.twitter.com/YuOPfzygkq

— KOLAPPA THANDESH (@skthandesh) August 28, 2020

**prabuG**

எனது ஊரில் எனது ஷோரூமுக்கு மிக அருகில் வசந்த் அன் கோ கிளை திறக்கப்பட்டது.யாரும் அறியா வண்ணம் விலைப் பட்டியலை பார்க்க நண்பணோடு சென்றேன்.

என்னை கவனித்த மேலாளர் அழைத்து குளிர்பானம் கொடுத்து சொன்ன செய்தி கவலை படாதீங்க சார் எங்க முதலாளி எப்பவுமே லோக்கல் தொழிலை முடக்க மாட்டார்..

#RIP

**கோழியின் கிறுக்கல்!!**

கொரோனா காட்டாற்று வெள்ளம் போல் கிடைப்பவரை எல்லாம் அடித்து செல்லத் துவங்கி விட்டது!!

வெள்ளத்தில் சிக்காமல் இருப்பது நம் கையில் தான் உள்ளது!!

**balebalu**

மேட்சே ஆரம்பிக்கல  அதுக்குள்ள கொறோனா விக்கெட் எடுக்க ஆரம்பித்து விட்டது !Crying face

#ChennaiSuperKings

**கடைநிலை ஊழியன்**

போட்டோ சூட் – தேவையான பொருட்கள்..

லேப்டாப் – 1 ( ஆப்பிள் / மற்றவை )

புத்தகங்கள் – 2

வாத்து அல்லது வாத்து பொம்மை – 2

நியூஸ் பேப்பர் – 1

**மயக்குநன்**

எஸ்.வி.சேகர் மன்னிப்பு கோரி மனுத்தாக்கல் செய்தால், கைது நடவடிக்கை எடுக்க மாட்டோம் என காவல்துறை தரப்பில் வாய்மொழி உத்தரவாதம்!

நானும் மன்னிப்பு கேட்கிறேன்… என்னைக் கைது செய்ய வேண்டாம்… என் மீதான வழக்குகள் அனைத்தையும் வாபஸ் வாங்கவும்… நன்றி…

இப்படிக்கு,

விஜய் மல்லையா.

**நாகராஜ சோழன் MA.MLA**

சட்டசபையில் அமர்வது நிச்சயம் – எல்.முருகன் பாஜக.

பார்வையாளர்கள் வரிசையில் யார் வேணாலும் உக்காரலாமே சார்???

**செந்திலின்_கிறுக்கல்கள்**

தண்ணீர் பஞ்சம் போயி சானிடைசர் பஞ்சம் என்ற காலம் வந்துவிட்டது…!

**அடக்கமாகும் வரை அடக்கமாய் இரு**

1. ‘இந்தக் கடிதம் கொண்டுவரும் பையனிடம் – இருபதோ முப்பதோ கொடுத்து அனுப்பினால் நலமாயிருக்கும்..!’

இப்படி ஒரு கடிதத்துடன் என் வீட்டிற்கு ஒரு பையன் ஓரிரு சமயங்களில் வந்த போதெல்லாம், எனக்கு வியர்த்துக் கொட்டும்..!

எவ்வளவு பெரிய எழுத்தாளர்; எப்படியிருந்தவர்.. அவருக்கா இப்படிஒரு சிரமம்..?

*

2. ஒரு கம்பெனியில் பாட்டு ‘கம்போஸிங்’. எம்.எஸ்.வி-யுடன் அமர்ந்திருக்கிறேன்.

அந்தக் கம்பெனி மாடியில் குடியிருக்கும் ஒருவர் ‘ஹாய் வாலி ..!’ என்று இறங்கி வருகிறார். என்னோடும் விசுவநாத அண்ணனோடும் – சிரிக்கச் சிரிக்க அளவளாவி விட்டு, ”வாலி..! உன் டிரைவரை விட்டு, ஒரு பாக்கெட் ‘பர்க்லி’ சிகரெட் வாங்கிண்டு வரச் சொல்லேன்.

555 வாங்க இப்பெல்லாம் வசதியில்லே..!”

எவ்வளவு பெரிய நடிகர்..! எம்.ஜி.ஆர், சிவாஜி படங்களில் அவர்களை விட அதிகம் சம்பளம் வாங்கியவர்! படுக்கையறைக்கே கார் வரும் மாதிரி – பங்களா கட்டியவர்! எங்கே போனது அந்த வாழ்வும் வளமும்..?

*

3. என் வீட்டு வாசலில் ஒரு Taxi .

ஒரு நடிகை என்னைப் பார்க்க வந்தவர், ‘வாலி சார்.. எனக்கு ஒரு நாடகம் எழுதிக் கொடுங்க; நான் ஒரு ட்ரூப் வெச்சு, நடத்தலாம்னு இருக்கேன்..!’ என்று சொன்னதும் –

நான் நூறு சுக்கல்களாய் நொறுங்கிப் போனேன்..!

*

4. சென்னை எழும்பூர் ரயில் நிலையம். சிமென்ட் பெஞ்சில் ஒருவர் அமர்ந்திருக்கிறார். இன்றைய தலைமுறைக்கு அவரைத் தெரியவில்லை.

நான் கவனித்து விட்டேன். ஓடிப் போய் அவரருகே சென்று, ‘நமஸ்காரம் அண்ணா..! நானும் உங்க மாதிரி திருச்சிக்காரன் தான்..!

இப்போ, சினிமாவில பாட்டு எழுதிண்டிருக்கேன். என் பேரு வாலி..!’ என்று அறிமுகப்படுத்திக்  கொண்டு, அவரை வணங்குகிறேன்.

‘ஓ  நீங்கதான் அந்த வாலியா..?’ என்று என் கைகளைப்  பற்றுகிறார்.

அவர் தொட மாட்டாரா என்று தமிழர்கள் ஏங்கித் தவமிருந்த காலம் ஒன்று உண்டு. அவர் என்னைத் தொடுகிறார். நான் சிலிர்த்துப் போகிறேன் –

அவர் தொட்டதால் அல்ல. அவரை மக்கள் கவனியாது விட்டதால்..!

காலம் எப்படியெல்லாம் காட்டுகிறது – தன் ஆளுமையை..!

இப்போது எண்ணிப் பார்க்கிறேன், அந்தப் பழைய நிகழ்வுகளை..!

*

1. என்னிடம் கடிதம் அனுப்பிப் பணம் கேட்டவர், ‘கண்ணகி’க்கு உயிர் கொடுத்த, உலகு புகழ் உரையாடல்களை எழுதிய திரு. இளங்கோவன்.

*

2. என்னிடம் சிகரெட் கேட்டவர் ‘மாடி வீட்டு ஏழை’யான திரு.சந்திரபாபு அவர்கள்.

*

3. நாடகம் எழுதித் தரக் கேட்டவர் – நடிகையர் திலகம் திருமதி.சாவித்திரி அவர்கள்.

*

4. எழும்பூர் ரயில் நிலையத்தில் எவர் கவனத்தையும் ஈர்க்காமல் அமர்ந்திருந்தவர் –

தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் டூப்பர் ஸ்டார் – திரு. எம்.கே. தியாகராஜ பாகவதர்.

*

இவர்களைவிடவா நான் மேலானவன் ? எனவே எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்:

“அடக்கமாகும் வரை அடக்கமாக இரு..”

நான் – அன்று முதல்  ‘நான்’ இல்லாமல் வாழப் பயின்றேன்.  !

— கவிஞர் வாலி

**லாக் ஆப்**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share