eஅண்டா கவுக்குற மாதிரி: அப்டேட் குமாரு

Published On:

| By Balaji

டீ குடிசிட்டு கிளாசை கவுத்து வச்சேன். என்னை ஒரு மாதிரியா பாத்தாரு மாஸ்டர். ‘என்னண்ணே… நான் என்ன ஆட்சியையா கவுத்துப்புட்டேன். அண்டாவை கவுக்குற மாதிரி ஆட்சியை கவுக்குறாங்க. நான் வெறும் கிளாசைதானே கவுத்து வச்சேன். காக்கா கக்கா போயிடப் போவுதுண்ணே அதுக்காகாத்தான்’ அப்படினு நான் காரணம் சொன்ன பிறகுதான் கண்ண அந்தப் பக்கம் நவுத்தினாரு.

நீங்க அப்டேட் பாருங்க

**ஜோக்கர்…**

கேஸ் விலை கூடிட்டே போகுதே, கொஞ்சம் குறைக்க கூடாதா?!

நிம்மி ~ அப்ப, விறகுக்கும் இனிமே GST போடுவோம்.. பரவால்லயா?!

**mohanram.ko**

ஏலம் எடுத்தாச்சு, மாமா

ஐபிஎல்ல கிரிக்கெட் ப்ளேயரா மாப்ள…

ப்ளேயரா? எம்எல்ஏ மாமா…

**சரவணன். ℳ**

எப்பதவியும் நிரந்தரம் இல்லை. சிவலோகப் பதவி மட்டுமே நிரந்தரம் ~ புதுவை முதல்வர் நாராயணசாமி

எப்படி இருந்த மனுஷன்…கிரண்பேடியையே சமாளிச்சவர், அவரைப் போய் இப்படி புலம்ப விட்டுட்டாங்களே…?

**ரஹீம் கஸ்ஸாலி**

புலிவாலை பிடிப்பதென்பது, சோஷியல் மீடியாவில்

மனைவிக்கு அக்கவுண்ட் ஒபன் செய்து கொடுப்பது.

**நாகராஜ சோழன் MA.MLA**

பாண்டிச்சேரியில் ஆட்சி கவிழ்ப்பு.செய்தி

E.P.S~

இதனால் என்னோட ஆட்சிக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே?

**mohanram.ko**

என்ன வாங்கிட்டு வர சொன்னேன்?

ஒரு மீரா ஷாம்பூ, ஒரு கிலோ சின்ன வெங்காயம் ..

ஷாம்பு இங்கே இருக்கு, சின்ன வெங்காயம் எங்கே?

அதானே இது…

**mohanram.ko**

ஒரு வருடம் ஜாலியா இருந்துட்டு, தேர்வுக்கு முதல் நாள் கண்ணு முழிச்சி படிக்கும் பசங்க மாதிரி தான், 5 வருஷம் சும்மாவே பொழுதை கழிச்சிட்டு தேர்தலுக்கு முன்னாடி மக்களை சந்திச்சி திட்டங்களா அறிவிக்கிற அரசியல்வாதிகளும்….

**balebalu**

இருக்குற நிலைமையில பெட்ரோல் பங்க் ல வேலை செஞ்சாலே கண்ணை மூடிட்டு பொண்ணு கொடுத்துருவாங்க போல !

#PetrolPrice

**PrabuG**

நாட்ல எம்எல்ஏ எல்லாம் சல்லிசா கிடைக்கும் போது. கிரகம் இந்த கருவேப்பிலைக்கு வந்த வாழ்வைப் பாரேன்…

**மயக்குநன்**

தமிழகம் முழுவதும் நான் வாங்கும் மனுக்களுக்கு தீர்வு காண தனித்துறை உருவாக்கப்படும்!- மு.க.ஸ்டாலின்.

நவீன ‘மனு’நீதிச்சோழன்..?!

**கோழியின் கிறுக்கல்!!**

குழந்தைகள் இருக்கும் வீதியில்,

பெரியவர்களும் எளிதில் நட்பாகி விட முடிகிறது!!

** – லாக் ஆஃப்**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share