Fஒரு நாள் உள்துறை அமைச்சர்!

Published On:

| By Balaji

தமிழ் மொழியில் வெளியான முதல்வன் படத்தில் நடிகர் அர்ஜுன் ஒரு நாள் முதல்வராக நடித்திருப்பார்.

அந்த வகையில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, பெண் காவலர் ஒருவருக்கு ஒரு நாள் உள்துறை அமைச்சர் பதவி வழங்கி சிறப்பிக்கப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேச மாநில உள்துறை அமைச்சராக, நரோட்டம் மிஷ்ரா உள்ளார். இன்று அவர் தனது உள்துறை அமைச்சர் நாற்காலியில் பெண் காவலர் மீனாட்சி வர்மாவை அமர வைத்து அழகு பார்த்துள்ளார்.

இந்த பெண் காவலர் மபியில் உள்ள நீரோட்டம் மிஷ்ராவின் குடியிருப்பில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார். இவரை ஒருநாள் உள்துறை அமைச்சராக நியமித்த மிஷ்ரா, உங்கள் பணியை தொடரலாம் என்று தெரிவித்திருக்கிறார்.

இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்குமென, கனவில் கூட நினைத்துப்பார்க்காத பெண் காவலர், மத்தியப் பிரதேஷ் ஏடிஜிபி அசோக் அஸ்வதிக்கு, மத்திய பிரதேச மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து, அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார்.

உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஷ்ராவின் வீட்டுக்கு தினசரி பலரும் பல்வேறு கோரிக்கைகளுடன் வருவார்கள். அவ்வாறு இன்று வந்தவர்கள், பெண் காவலர், மிஷ்ராவின் இருக்கையில் அமர்ந்திருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் ஒரு நாள் உள் துறை அமைச்சராக கவுரவிக்கப்பட்டுள்ளார் என்பதை அறிந்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

அதுபோன்று, இந்த மகளிர் தினத்தை மறக்க முடியாத நாளாக மாற்றிய நரோட்டம் மிஷ்ராவுக்கு பெண் காவலர் நன்றி தெரிவித்துள்ளார். மகளிர் தினத்தை முன்னிட்டு, பிரதமர் முதல் பிரபலங்கள் வரை வாழ்த்து தெரிவித்த நிலையில், மபி உள்துறை அமைச்சரின் இந்த வித்தியாசமான செயல் பெண்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

**-பிரியா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share