Vஇன்று இறைச்சி விற்பனை செய்ய தடை!

Published On:

| By Balaji

நேற்றைய தீபாவளி, சைவ தீபாவளியாகவும் இன்று (அக்டோபர் 28) திங்கட்கிழமை அரசாங்க விடுமுறையாகவும் உள்ள நிலையில் மகாவீர் நிர்வாண் தினத்தை முன்னிட்டு, இன்று அனைத்து இறைச்சி கூடங்களும் மூடப்பட வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “பெருநகர சென்னை மாநகராட்சி, பொது சுகாதாரத்துறை (கால்நடை மருத்துவப் பிரிவு) கட்டுப்பாட்டில் இயங்கும் இறைச்சி கூடங்கள், மகாவீர் நிர்வாண் தினத்தை முன்னிட்டு, திங்கட்கிழமை அரசு உத்தரவின்படி மூடப்படுகின்றன. இதேபோல் ஆடு, மாடு, இதர இறைச்சி விற்பவர்கள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் வணிக வளாகங்களில் பதப்படுத்திய இறைச்சி விற்பனை செய்யவும் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே அரசு உத்தரவின்படி, கண்டிப்பாக 28ஆம் தேதி அனைத்து இறைச்சி கூடங்கள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் வணிக வளாகங்களில் பதப்படுத்திய இறைச்சிகளை விற்பனை செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. அரசு உத்தரவைச் செயல்படுத்த வியாபாரிகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து தண்டையார்பேட்டையைச் சேர்ந்த கோழிக்கறி விற்பனையாளர் முகமது உசேன், “பொதுவாக தீபாவளிக்கு முதல் நாள் இரவே ஆடு, கோழி இறைச்சியை விற்பனை செய்ய தொடங்கி விடுவோம். இந்த தீபாவளி ஞாயிற்றுக்கிழமையில் வந்தாலும் அமாவாசையோடு வந்ததால் வியாபாரம் பாதிக்கப்பட்டது. நிறைய பேர் அமாவாசை தினத்தில் அசைவ உணவை ஏற்கமாட்டார்கள். அதனால் வியாபாரம் மந்தமாக இருந்தது.

இன்று (28ஆம் தேதி) மகாவீர் நிர்வாண் தினத்துக்காக இறைச்சி கடைகள் மூடப்படுகிறது. இதனால் வியாபாரம் பாதிக்கும். நாளை செவ்வாய்க்கிழமை அன்று பொதுவாக அசைவ உணவைத் தவிர்ப்பார்கள். ஏற்கெனவே புரட்டாசி மாதத்தில் இறைச்சி வியாபாரம் கடுமையாக பாதித்தது. இப்போது தீபாவளி பண்டிகை வியாபாரமும் பாதித்துள்ளது” என்று கூறினார்.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share