aகங்குலிக்கு எதிரான புகார் தள்ளுபடி!

Published On:

| By Balaji

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவர் சவுரவ் கங்குலிக்கு எதிராக கொடுக்கப்பட்ட புகார் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபர் 23ஆம் தேதி மும்பையில் நடைபெற்ற இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி 39ஆவது தலைவராக பொறுப்பேற்றார்.

இதற்கிடையில் அவர் மீது மத்தியப் பிரதேச கிரிக்கெட் அமைப்பின் வாழ்நாள் உறுப்பினர் சஞ்சீவ் குப்தா பிசிசிஐ நெறிமுறை அதிகாரி ஜெயினுக்கு புகார் அனுப்பியிருந்தார். அக்டோபர் 4ஆம் தேதி அனுப்பிய அந்த புகாரில், கங்குலி பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் (சிஏபி) தலைவராக இருந்துகொண்டே, பிசிசிஐயின் பிரதிநிதியாகவும் இருக்கிறார் என்று புகார் அளித்திருந்தார். பிசிசிஐ விதிமுறைப்படி ஒருவர், ஆதாயம் தரும் இரட்டை பதவிகளில் இருக்கக் கூடாது என்று அந்த புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் அக்டோபர் 23ஆம் தேதி பிசிசிஐ தலைவராகப் பதவி ஏற்கும் முன்பே, கங்குலி தனது சிஏபி தலைவர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். இந்த நிலையில், கங்குலிக்கு எதிராக அளிக்கப்பட்ட புகார் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து நேற்று (நவம்பர் 16) பிசிசிஐ நெறிமுறை அதிகாரி ஜெயின் கூறுகையில், ”என்னைப் பொறுத்தவரை கங்குலி பிசிசிஐ பதவியை ஏற்பதற்கு முன்னதாகவே, பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். அவர் மீது இரட்டை பதவி குற்றச்சாட்டு எதையும் சுமத்த முடியாது. அவருக்கு எதிராக அளிக்கப்பட்ட புகார் பயனற்றது. எனவே அதனைத் தள்ளுபடி செய்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share