vஅனைத்தும் பற்றாக்குறை: முதல்வர் கெஜ்ரிவால்

Published On:

| By Balaji

கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில், டெல்லியில் ஆக்சிஜன், ஐசியூ படுக்கை,ரெம்டெசிவீர் மருந்து ஆகியவை பற்றாக்குறையாக உள்ளது என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம், “டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 24,000 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே ஐசியூ படுக்கைகள் உள்ளன. ஆக்சிஜன் மற்றும் ஐசியூ படுக்கைகள், ரெம்டெசிவீர் மருந்தும் குறைந்து கொண்டே வருகின்றன. படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நாங்கள் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

டெல்லியில் தொற்று பாதிப்பு 25 சதவீதத்தை எட்டியுள்ளது. அதாவது கொரோனா பரிசோதனையில் நான்கில் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்படுகிறது. கொரோனா பரவலின் தீவிரம் கவலை அளிக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்புவரை, அனைத்தும் கட்டுப்பாட்டில் இருப்பதாக தோன்றியது. தற்போது அனைத்திலும் பற்றாக்குறையை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அதிவேகத்தில் பரவும் கொரோனாவின் உச்சம் எங்கே கொண்டு போய்விடும் என்பது யாருக்கும் தெரியாது. சுகாதார உள்கட்டமைப்பில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசாங்கம் முடிந்தவரை முயற்சிக்கிறது. அடுத்த இரண்டு அல்லது நான்கு நாட்களில் மேலும் 6,000 படுக்கைகளை உருவாக்க முடியும் என்று நம்புகிறேன். ஆனால், இதுபோதாது. கொரோனா எப்போது உச்சம் அடையும் என்று தெரியாததால், நமக்கு ஓய்வு கிடையாது. கொரோனாவை விட ஒரு படி மேலே சென்று போராட வேண்டிய நேரமிது.

படுக்கைகளின் எண்ணிக்கையை மத்திய அரசு அதிகரிக்க வேண்டும். நவம்பர் மாதத்தில் 4,100 படுக்கைகளை வழங்கிய மத்திய அரசு, தற்போது நிலைமை மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கும்போது மருத்துவமனைகளில் கோவிட் -19 சிகிச்சைக்காக 1,800 படுக்கைகள் மட்டுமே ஒதுக்கியுள்ளது. வார இறுதி ஊரடங்கின் முதல் நாளில் சில மாற்றங்கள் தெரிந்துள்ளது. இதுகுறித்து மதிப்பாய்வு செய்யப்படும்” என தெரிவித்துள்ளார்.

**வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share