_கிச்சன் கீர்த்தனா: மாங்கொட்டை ரசம்!

Published On:

| By Balaji

சாதாரணமாக மாம்பழத்தை ருசிக்கும் அனைவரும், அதன் சாற்றை கொட்டைவரை நன்கு உறிஞ்சி சுவைத்துவிட்டு கொட்டையை வீசிவிடுவார்கள். மாம்பழத்தின் சுவையைவிட, அதன் கொட்டையில் நல்ல ஊட்டச்சத்துகளும், வைட்டமின் மற்றும் தாதுகளும் அடங்கியுள்ளன. மாங்கொட்டையில் செய்யப்படும் இந்த ரசம் வித்தியாசமான ருசியைத் தரும்.

**என்ன தேவை?**

வெந்நீரில் கழுவி சுத்தம் செய்த மாங்கொட்டை – 4

துவரம் பருப்பு வேகவைத்த தண்ணீர் – ஒரு கப்

நறுக்கிய சின்ன வெங்காயம் – 3

நறுக்கிய தக்காளி – ஒன்று

நறுக்கிய பச்சை மிளகாய் – 2

பூண்டு – 5 பற்கள்

சீரகம் – ஒரு டீஸ்பூன்

மிளகு – ஒரு டீஸ்பூன்

எண்ணெய் – 2 டீஸ்பூன்

கடுகு – அரை டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு – அரை டீஸ்பூன்

சோம்பு – அரை டீஸ்பூன்

பெருங்காயம் – அரை டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் – 3

கறிவேப்பிலை – கொத்தமல்லி – சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

**எப்படிச் செய்வது?**

மிளகு, சீரகம் இரண்டையும் நுணுக்கிக் கொள்ளவும். பிறகு இதனுடன் பூண்டு சேர்த்துத் தட்டிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி கடுகு, உளுத்தம் பருப்பு, சோம்பு, பெருங்காயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றைத் தாளிக்கவும். பின்னர் இதனுடன் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் ஆகிய மூன்றையும் சேர்த்து வதக்கவும். இதனுடன் பருப்பு வேகவைத்த தண்ணீரைச் சேர்க்கவும். பிறகு இதில் மாங்கொட்டையைச் சேர்த்து நன்கு வேகவிடவும். பின்னர் இதில் மிளகு, சீரகம், பூண்டுக் கலவையையும், தேவையான உப்பையும் சேர்க்கவும். பின்னர் கொத்தமல்லி தூவி இறக்கவும்.

**குறிப்பு**

புளிப்பு இன்னும் தேவைப்பட்டால் சிறிது எலுமிச்சைச் சாறும் சேர்க்கலாம்.

[நேற்றைய ரெசிப்பி : மாம்பருப்புக் குழம்பு](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/public/2021/07/16/1/mango-kulambu)

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share