மாம்பழத்தில் 100-க்கும் அதிக வகைகள் உள்ளன. செந்தூரம், அல்போன்சா, மனோரஞ்சிதம், நாட்டுக்காய், மல்கோவா, காளையபாடி, காசா, கிளிமூக்கு, பங்கனபள்ளி, நார் மாம்பழம் (நீலம் மாம்பழம்), கல்லா மாங்காய், ருமேனியா, இமாயத் (இமாம் பசந்தி) ஆகியவை நமக்குக் கிடைக்கக்கூடிய முக்கியமான சில வகைகள். ஒரு நாளுக்குத் தேவையான வைட்டமின் சி, வைட்டமின் ஏ மற்றும் நார்ச்சத்தை அளிக்கக்கூடிய மாம்பழங்களை ஜாம் செய்து வைத்துக்கொண்டு ருசிக்கலாம்.
**என்ன தேவை?**
தித்திப்பான பழுத்த மாம்பழங்கள் – 6
சர்க்கரை – 250 கிராம்
மாம்பழ எசென்ஸ் – சில துளிகள்
கேசரி ஃபுட் கலர் – ஒரு சிட்டிகை
சோள மாவு – அரை டீஸ்பூன்
சிட்ரிக் ஆசிட் – கால் டீஸ்பூன்
**எப்படிச் செய்வது?**
மாம்பழங்களைச் சுத்தப்படுத்தி பிழிந்து கொள்ளவும். அடிகனமான பாத்திரம் (அ) நான்ஸ்டிக் கடாயில் மாம்பழக்கூழ், சர்க்கரை, சிட்ரிக் ஆசிட், ஃபுட் கலர் சேர்த்து இளம் தீயில் கொதிக்கவிடவும்.
சோள மாவைச் சிறிது தண்ணீரில் கரைத்து இதனுடன் சேர்க்கவும். சிறிது கெட்டியானதும் எசென்ஸைச் சேர்க்கவும். சிறிது ஜாமை ஒரு தட்டில் ஊற்றினால் அது ஓடாமல் நெகிழ இருக்கும் சமயத்தில் அடுப்பை அணைக்கவும் (ஜாம் போன்றவை செய்யும்போது அடுப்பை ‘சிம்’மில் வைத்தால் அடிபிடிக்காது).
**[நேற்றைய ரெசிப்பி : மாம்பழப் பச்சடி](https://www.minnambalam.com/public/2021/07/13/1/mango-pachady)**
.�,