மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் சட்டமன்றத்தில் இன்றே பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்ற சிவசேனா, காங்கிரஸ்,தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கோரிக்கை இன்று (நவம்பர் 24) உச்ச நீதிமன்றத்தால் ஏற்கப்படவில்லை. வழக்கை நாளைக்கு ஒத்தி வைத்திருக்கிறது உச்ச நீதிமன்றம்.
குதிரை பேரத்துக்கு வழி வகுக்கும் என்று சிவசேனா தரப்பு வாதாடியும் வழக்கை நாளைக்கு ஒத்தி வைத்திருக்கிறது உச்ச நீதிமன்றம். இந்த அவகாசத்தால் தெம்படைந்த பாஜக மேற்குறிப்பிட்ட மூன்று கட்சிகளில் இருந்தும் தனக்கான ஆதரவு எம்.எல்.ஏ.க்களை பெறுவதில் தீவிரமாகியிருக்கிறது.
ஆர்.எஸ்.எஸ். மூத்த பிரமுகர்கள் சிலரிடம் பேசியபோது, “காரணமில்லாமலா அதிகாலையில் பதவியேற்பார் பட்னவிஸ்? பாஜக 105, சுயேச்சைகள் 13 தவிர காங்கிரசில் இருந்து 23 எம்.எல்.ஏ.க்கள், சிவசேனாவில் இருந்து 21 எம்.எல்.ஏ.க்கள், என்.சி.பி.யில் இருந்து 18 எம்.எல்.ஏ.க்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள். அவர்களை எந்த மாநிலத்துக்கு சென்று எந்த ஹோட்டலில் வைத்தாலும் அவர்கள் எங்கள் எம்.எல்.ஏ.க்கள்தான். இதுதான் எங்கள் கணக்கு” என்று கூலாக சொல்கிறார்கள்.�,