100 சதவிகிதம் காப்பீடு செய்த கிராமம்!

public

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி யூனியன் ஆண்டிபட்டி ஊராட்சியைச் சேர்ந்த சின்னமநாயக்கன்பட்டி, தும்பிச்சம்பட்டி கிராமங்களில் வசித்து வரும் அனைத்து குடும்பத்தினரும் காப்பீடு மற்றும் ஓய்வூதிய திட்டத்தில் முழுமையாக சேர்ந்துள்ளதால் முதன்முறையாக 100 சதவிகிதம் காப்பீடு செய்யப்பட்ட ஊராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மண்டல யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா சார்பில் ஆண்டிபட்டி ஊராட்சியைத் தத்தெடுத்து அந்தக் கிராமத்தில் காப்பீடு மற்றும் ஓய்வூதியம் பெற்றிட விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து அந்தக் கிராமத்தில் அனைவரையும் சேர்க்கப்பட்டு 100 சதவிகிதம் நிறைவு செய்யப்பட்டது.

தனிநபர், குடும்பம், கிராமம் பாதுகாப்பினை கருதி அனைத்து மக்களும் ஒற்றுமையாக இந்தத் திட்டத்தில் இணைத்ததற்கு பாராட்டும் விழா நேற்று ஆண்டிபட்டி மந்தை திடலில் நடந்தது. விழாவுக்கு கலெக்டர் அனிஷ்சேகர் தலைமை தாங்கி காப்பீட்டாளர்களைப் பாராட்டி பரிசு வழங்கினார்.

இந்த விழாவில் சின்னமநாயக்கன்பட்டியில் அடல்பென்ஷன் யோஜனா திட்டத்தில் 193, பிரதம மந்திரி ஜீவன்ஜோதி பீமாயோஜனா திட்டத்தில் 288, பிரதம மந்திரி சுரஷா பீமாயோஜனா திட்டத்தில் 455, தும்பிச்சம்பட்டியில் அடல்பென்ஷன் யோஜனா திட்டத்தில் 64, பிரதம மந்திரி ஜீவன்ஜோதி பீமாயோஜனா திட்டத்தில் 209, பிரதம மந்திரி சுரஷா பீமாயோஜனா திட்டத்தில் 129 ஆகிய திட்டங்களில் சேர்க்கப்பட்ட பயனாளிகளுக்கு சான்றுகளை வழங்கினார்.

மேலும் காப்பீடு திட்டத்தில் சேர்ந்து பாம்பு கடித்து இறந்த ராமசாமி மனைவி சிங்காரியிடம் ரூ.2 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது.

**-ராஜ்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.