Yகிச்சன் கீர்த்தனா: ஈஸி மதுரா பேடா

public

கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில், விதவிதமான இனிப்பு, கார வகைகள் செய்து உறவுகளோடும் நண்பர்களோடும் பகிர்ந்துகொள்வதும், விருந்தோம்பலும் இந்த வருட தீபாவளிக்கு எந்த அளவுக்கு சாத்தியம் என்று தெரியவில்லை. ஆனால், வீட்டிலேயே செய்யப்படும் இந்த ஈஸி மதுரா பேடா, உங்கள் தீபாவளியை மேலும் சிறப்பாக்கும்.

**என்ன தேவை?**

இனிப்பில்லாத கோவா – ஒரு கப்

பொடித்த சர்க்கரை – அரை கப்

ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை

நெய் – 3 டேபிள்ஸ்பூன்

இனிப்பில்லாத கோவா செய்ய…

பால் பவுடர் – ஒரு கப்

தண்ணீர் – தேவையான அளவு

அலங்கரிக்க…

நீளவாக்கில் நறுக்கிய பாதாம், பிஸ்தா – தலா ஒரு டேபிள்ஸ்பூன்

**எப்படிச் செய்வது?**

பால் பவுடருடன் தண்ணீர் சேர்த்து நன்கு பிசையவும். இதைப் பாத்திரத்தில் போட்டு மூடவும். குக்கரில் இந்தப் பாத்திரத்தை வைத்து நான்கு விசில்விட்டு இறக்கவும். இதுவே இனிப்பில்லாத கோவா.

அடிகனமான வாணலியில் நெய்விட்டு உருக்கி, கோவாவைச் சேர்த்து கைவிடாமல் கிளறவும். கலவை பிரவுன் நிறமாகியதும் இறக்கி ஆறவிடவும். கைபொறுக்கும் சூட்டுக்கு வந்தவுடன் சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும். மாவைச் சிறிய உருண்டைகளாக்கி, பேடா வடிவத்துக்குத் தட்டவும். நடுவே கட்டை விரலால் சிறிய பள்ளம் செய்து பாதாம், பிஸ்தா தூவி அழுத்திப் பரிமாறவும்.

**[நேற்றைய ரெசிப்பி: சோமாஸ்](https://www.minnambalam.com/public/2021/11/01/1/somash)**

.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.