mஜெயமோகன் இணையதளம் முடக்கம் – கமல் காரணமா?

public

நடிகர் கமல்ஹாசன் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, மகாபாரதத்தைப் பற்றி இழிவாகப் பேசினார் என்று குற்றம்சாட்டி அவர்மீது பல்வேறு வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. மார்ச் 26ஆம் தேதி பெங்களூருவைச் சேர்ந்த பசவேஸ்வரா மடத்தின் பிரணவானந்தாவும் கமல்ஹாசன் மகாபாரதத்தை இழிவுபடுத்தியதாக புகார் அளித்திருக்கிறார்.

இதையடுத்து, கமலுக்கு ஆதரவளிக்கும்விதமாக எழுத்தாளர் ஜெயமோகன், ‘இந்து முல்லாகள் உருவாக அனுமதிப்போமா?’ என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை எழுதினார். இதைத் தொடர்ந்து அவரது இணையதளம் முடக்கப்பட்டது. மார்ச் 24ஆம் தேதிக்குப் பிறகான எந்தப் பதிவுமே இணையதளத்தில் இல்லை. அந்தக் கட்டுரையில் பிரணவானந்தா போன்றோர் இந்து மதத்துக்கு எதிராகப் பேசுபவர்களை ஒடுக்க மதவிரோத தடுப்புச் சட்டத்தை இயற்ற வழிகாட்டுவதாக குறிப்பிட்டார்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு அவரது இணையதளம் முடக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது இணையதளத்தில் இருந்து ‘இந்து முல்லாகள் உருவாக அனுமதிப்போமா?’ உள்ளிட்ட கட்டுரைகள் நீக்கப்பட்டன. மார்ச் 24ஆம் தேதிக்குப் பிறகான எந்தப் பதிவுமே இணையதளத்தில் இல்லை. மேலும் போலியான முகப்புப் பக்கம் ஒன்று மட்டும் உள்ளது. அதில் காட்டப்படும் எந்தப் பதிவையும் படிக்க முடியாமல் இணையதளம் முடக்கப்பட்டதா? என்பது பற்றி எழுத்தாளர் ஜெயமோகன் தரப்பிலிருந்து எந்தக் கருத்தும் உடனடியாகக் கிடைக்கவில்லை. கமலுக்கு ஆதரவாக அவர் எழுதியதே இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது. ஆனால் இப்போது ஜெயமோகனின் இணையதளம் அனைத்துப் பதிவுகளுடனும் மறுபடியும் கிடைக்கிறது.

[இந்து முல்லாகள் உருவாக அனுமதிப்போமா?](http://www.jeyamohan.in/96854)�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *