mசாந்தா கோச்சரும் வீடியோகான் நிறுவனமும்!

public

2001ஆம் ஆண்டிலிருந்தே வீடியோகான் நிறுவனமும் சாந்தா கோச்சர் மற்றும் அவரது குடும்பத்தினரும் நிறுவனம் ஒன்றின் பங்கு முதலீட்டில் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

ஐசிஐசிஐ வங்கியின் தலைமைச் செயலதிகாரியான சாந்தா கோச்சரின் கணவர் தீபக் கோச்சர் மற்றும் வீடியோகான் நிறுவனத் தலைவர் வேணுகோபால் தூத் ஆகிய இருவரும் நியூ பவர் ரினியூவபிள்ஸ் என்ற நிறுவனத்தின் பங்கு பரிமாற்றத்தில் மோசடி செய்தது கண்டறியப்பட்டு அவர்கள்மீது சிபிஐ விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஐசிஐசிஐ வங்கியிடம் இந்நிறுவனத்துக்காகக் கடன் பெற்றதிலும் முறைகேடு நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் வங்கி அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. சாந்தா கோச்சர் இந்த விவகாரத்தில் சம்பந்தப்படவில்லை என்று கூறப்படுகிறது. எனினும் அவரது கணவர் சம்பந்தப்பட்டிருப்பதாலும், வீடியோகான் நிறுவனத்துக்குக் கடன் வழங்கப்பட்டபோது சாந்தா கோச்சர் அவ்வங்கியில் பதவி வகித்ததாலும் அவர் பதவி விலக வேண்டும் என வங்கி உயர்மட்டக் குழுவினர் சிலர் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த நிலையில், சாந்தா கோச்சருக்கும் வீடியோகான் நிறுவனத்துக்கும் நீண்ட காலமாகவே சம்பந்தம் இருந்தது தற்போது தெரியவந்துள்ளது. 2001ஆம் ஆண்டில் கிரெடன்ஷியல் ஃபைனான்ஸ் என்ற நிறுவனத்தில் சாந்தா கோச்சரும் அவரது குடும்பத்தின் ஆறு உறுப்பினர்களும் 2 சதவிகித பங்கு உரிமையை வைத்திருந்தனர். அதே நிறுவனத்தில் அதே சமயத்தில் வேணுகோபால் தூத்துக்குச் சொந்தமான வீடியோகான் நிறுவனமும் 17.74 சதவிகிதப் பங்குகளைக் கொண்டிருந்தது. வேணுகோபால் தூத் சம்பந்தப்பட்ட வேறு சில நிறுவனங்களும் அப்போது 1.6 சதவிகிதப் பங்குகளை வைத்திருந்தன. 2007ஆம் ஆண்டின் நிறுவனப் பதிவில் கிடைத்த விவரங்கள் வாயிலாக இந்தக் தகவல் கிடைத்துள்ளதாக லைவ் மின்ட் ஊடகம் ஏப்ரல் 11ஆம் தேதி செய்தி வெளியிட்டுள்ளது.

2009ஆம் ஆண்டில் ஐசிஐசிஐ வங்கியின் தலைமைச் செயலதிகாரியாக சாந்தா கோச்சருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டவுடன் அவர் 2010ஆம் ஆண்டில் கிரெடன்ஷியல் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் தனக்குச் சொந்தமாக இருந்த பங்குகள் அனைத்தையும் விற்பனை செய்துள்ளார். அதன்பிறகு 2014ஆம் ஆண்டு வரையிலான தகவல்களின்படி சாந்தா கோச்சருக்கும் அந்த நிறுவனத்தில் எந்தப் பங்கும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. அவர் ஐசிஐசிஐ வங்கியின் தலைமைச் செயலதிகாரியாகப் பதவி உயர்வு பெற்ற பிறகுதான் 2012ஆம் ஆண்டில் வீடியோகான் நிறுவனத்துக்கு ரூ.3,250 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *