Mஷேக்ஸ்பியர் கதையில் சாக்‌ஷி

Published On:

| By Balaji

வில்லியம் ஷேக்ஸ்பியரின் புகழ்பெற்ற நாடகமான ‘மெக்பெத்’ தமிழில் திரைப்படமாக எடுக்கப்படுகிறது. இதில், சதீஸ் நீனாசம் மற்றும் சாக்‌ஷி அகர்வால் ஆகியோர் நடிக்கின்றனர். 1606ஆம் ஆண்டு முதன் முதலாக நிகழ்த்தப்பட்ட இந்நாடகத்தை 413 ஆண்டுகளுக்குப் பிறகு படமாக எடுக்கின்றனர். இதற்கு ‘பகைவருக்கு அருள்வாய்’ என்று பெயரிட்டிருக்கின்றனர்.

அதிகாரத்தைக் கைப்பற்றத் துடிப்பவர்களின் உடல் மற்றும் மனதளவிலான பாதிப்புகளை அடிப்படையாகக் கொண்டு, உலகம் முழுவதுமுள்ள அதிகார வர்க்கத்தினரின் மற்றொரு முகத்தை ஷேக்ஸ்பியரின் The Tragedy of Macbeth உலகுக்குக் காட்டியது. இதனை இன்றைய உலகத்துக்கு ஏற்றது போல மாற்றியமைத்து இயக்கும் பொறுப்பினை, ‘திருமணம் எனும் நிக்காஹ்’ திரைப்படத்தின் இயக்குநர் அனீஸ் ஏற்றுக்கொண்டுள்ளார்.

ஜிப்ரானின் இசை, 96 படத்தின் ஒளிப்பதிவாளர் சண்முக சுந்தரம் என பலமான தொழில்நுட்ப கலைஞர்களை படத்தில் சேர்த்திருக்கின்றனர். அதேசமயம், தனக்கும் ஒரு வலிமையான கேரக்டர் வேண்டும் எனத் தேடிக்கொண்டிருந்த நடிகை சாக்‌ஷி அகர்வாலுக்கு இதில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. காலா, விஸ்வாசம் போன்ற திரைப்படங்களின் மூலம் தனக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்த்த சாக்‌ஷி ஏமாறவில்லை.

.

.

**

மேலும் படிக்க

**

.

**

[தினகரனுக்கு எடப்பாடி சொன்ன செய்தி!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/27)

**

.

**

[டிஜிட்டல் திண்ணை: கெஞ்சல், மிரட்டல்- கமல் வெளியிடாத ரகசியத் தகவல்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/84)

**

.

**

[ரித்தீஷ் மனைவி மீது புகார்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/51)

**

.

**

[ரசிகர்களை ஏமாற்றிய மிஸ்டர் லோக்கல்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/16/70)

**

.

**

[ரவீந்திரநாத் எம்பி: கல்வெட்டில் பெயர் மறைப்பு!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/56)

**

.

.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share