பிருத்விராஜ் நடிப்பில் 2013இல் வெளியான `செல்லுலாய்டு’ படத்தில் `காட்டே காட்டே’ என்ற பாடல் மூலம் மலையாள ரசிகர்களிடமும், அப்பாடலின் தமிழ் வெர்ஷனில் பழநிபாரதி வரிகளில் ஒலித்த காற்றே காற்றே நீ மூங்கில் துளைகளில் கீதம் இசைப்பதென்ன” பாடலின் வாயிலாக தன் காந்தக் குரலால் தமிழ் ரசிகர்களிடமும் மனம் கவர்ந்த பின்னணிப் பாடகியானவர் வைக்கம் விஜயலக்ஷ்மி. அவருக்கு நேற்று (ஜூலை6) சென்னையில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
பிறவியிலே பார்வையற்றவரான இவர், சாதிப்பதற்கு உடல் குறைபாடு ஒரு தடையில்லை என்பதை நிரூபித்துள்ளார். `காற்றே காற்றே’ பாடலுக்குப் பிறகு தமிழில் `குக்கூ’ படத்தில் `கோடையில மழை போல’ பாடலையும் `ரோமியோ ஜுலியட்’ படத்தில் `இதற்குத் தானே ஆசைப்பட்டாய்’ பாடலையும் பாடியுள்ளார். அதோடு `வீர சிவாஜி’ படத்தில் `சொப்பன சுந்தரி’ பாடலையும் பாடி இளசுகள் மனசிலும் இடம்பிடித்தார். சமீபத்தில் கொச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தொடர்ந்து ஐந்து மணி நேரம் இடைவிடாமல் காயத்ரி வீணை மூலம் மலையாளம், தமிழ் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் அவர் 67 பாடல்கள் மற்றும் 12 கீர்த்தனைகளையும் பாடி புதிய சாதனை படைத்துள்ளார். இசையுலகில் இவரது சாதனைகளை பாராட்டி இவரை கௌரவிக்கும் விதமாக அமெரிக்காவைச் சேர்ந்த உலக தமிழ் பல்கலைக்கழகம் இவருக்குக் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கிச் சிறப்பித்துள்ளது.
சமீபத்தில் திருமணத்துக்குத் தயாரான இவர், திருமணத்துக்குப் பிறகு இசைத்துறையைக் கைவிடவேண்டும் என்ற மாப்பிள்ளை வீட்டினரின் சட்டத்திட்டங்களுக்கு உட்படாமல், திருமணத்தை வீசி எரிந்ததற்கே பெரிய பெரிய விருதுகளைக் கொடுத்து சீராட்டியிருக்கவேண்டும் இந்திய இசையுலகம்.
�,”