வேலூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் வருமான வரித் துறையினர் நடத்திய சோதனையில் 27.76 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது.
தேர்தல் ரத்து செய்யப்பட்ட வேலூருக்கு ஆகஸ்ட் 5ஆம் தேதி தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து வேலூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததுடன், பணப்பட்டுவாடாவைத் தடுக்க தேர்தல் பறக்கும் படையினரும் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் வேலூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட அலமேலுமங்கபுரம் அருகிலுள்ள புதுவசூரில் ஏழுமலை என்பவரது வீட்டில் நேற்று (ஜூலை 13) நண்பகல் சென்ற 10 பேர் கொண்ட வருமான வரித் துறை அதிகாரிகள், தேர்தல் கண்காணிப்புக் குழுவினர் அதிரடியாக சோதனை நடத்தினர்.
பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வந்த ரகசிய தகவலையடுத்து இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அதிகாரிகளைப் பார்த்த ஏழுமலை குடும்பத்தினர் ஒரு பையை வீட்டின் பின்புறம் வீசியிருக்கிறார்கள். இதைக் கண்ட வருமான வரி அதிகாரிகள் அந்தப் பையைக் கைப்பற்றி சோதனை நடத்தியதில் ரூ.27.76 லட்சம் ரூபாய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக ஏழுமலையிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அப்போது, “அந்தப் பணம் என்னுடையதுதான். வீடு விற்பது, வாங்குவது உள்ளிட்ட தொழில்களின் மூலமாக அந்தப் பணம் வந்தது. அதை வீட்டில் வைக்கச் சொல்லி குடும்பத்தினரிடம் கொடுத்திருந்தேன். 10 பேர் அதிரடியாக வருவதைப் பார்த்த எங்கள் வீட்டு ஆட்கள் பயந்து போய் பணப் பையைத் தூக்கி வீசியுள்ளனர்” என அதிகாரிகளிடம் ஏழுமலை வாக்குமூலம் அளித்திருக்கிறார். இதனையடுத்து அதிகாரிகள் அந்த பணம் வந்த வழி, வங்கிக் கணக்குகள் மற்றும் ஆவணங்களைக் காண்பிக்கும்படி கூறி தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டனர்.
**
மேலும் படிக்க
**
**[அவசரப்பட்டுவிட்டேனோ? புலம்பிய தங்கம்](https://minnambalam.com/k/2019/07/13/18)**
**[நிர்வாகிகள் விலகுவதை தடுக்க…சசிகலா போட்ட பட்ஜெட்!](https://minnambalam.com/k/2019/07/13/7)**
**[டிஜிட்டல் திண்ணை: திமுக எம்.எல். ஏ.க்களுக்கு லைஃப் செட்டில்மென்ட்- கூல் எடப்பாடி](https://minnambalam.com/k/2019/07/13/72)**
**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**
**[ மோடிக்கு தயாநிதியை தூது அனுப்பினாரா ஸ்டாலின்?](https://minnambalam.com/k/2019/07/12/24)**
�,”