பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்திக்குத் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தியினை நாடு முழுவதும் உள்ள ஆறுகளில் கரைப்பது என்று பாஜக முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் வரும் 26 ஆம் தேதி சென்னை, ராமேஸ்வரம் உட்பட 7 இடங்களில் அஸ்தி கரைக்கப்படவுள்ளது.
அதன்படி வாஜ்பாயின் அஸ்தி அடங்கிய கலசமானது தமிழக பாஜக தலைவர் தமிழிசை மற்றும் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனிடமும் ஒப்படைக்கப்பட்டது. தற்போது அந்தக் கலசம் தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
அதற்கு இன்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அஞ்சலி செலுத்தினார்
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இருவரும் நேரில் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினர்
அதுபோன்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி, தமிழ்நாடு வணிகர் பேரமைப்புத் தலைவர் விக்ரம ராஜா, நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன், திமுக உறுப்பினரும் நடிகருமான ராதாரவி, முன்னாள் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதிமாறன், திமுக முன்னாள் எம்பி டி.ஆர்.பாலு, எனப் பல்வேறு தரப்பினரும் வாஜ்பாய் அஸ்திக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
இன்று காலை திமுக எம்பி கனிமொழியும், திமுக செயல் தலைவர் ஸ்டாலினும் அஞ்சலி செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.�,