mரயில்வே ஊழியர்கள் டிசம்பரில் போராட்டம்!

Published On:

| By Balaji

ஒப்பந்தத்தின்படி மட்டும் வேலை செய்வது என்ற முடிவின் கீழ், ரயில்வே ஊழியர்கள் வரும் டிசம்பர் 11ஆம் தேதி முதல் பணி நேரத்தில் போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

இது குறித்து அனைத்திந்திய ரயில்வே ஊழியர்கள் கூட்டமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. இதன்படி, ஊழியர்களின் தேவைகளைச் சந்திக்க ரயில்வே அமைச்சகம் மறுப்பதால் ஒப்பந்தத்தின் கீழ் உள்ள பணிகளை மட்டும் செய்யவும், கூடுதல் பணிகளைச் செய்யாமல் இருக்கவும் டிசம்பர் 11ஆம் தேதி முதல் போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அனைத்திந்திய ரயில்வே ஊழியர்கள் கூட்டமைப்பின் 70ஆவது ஆண்டு கூட்டம், கடந்த நவம்பர் 15 முதல் 17ஆம் தேதி வரை நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் குறித்து ரயில்வே அமைச்சரான பியூஷ் கோயல் எதிர்மறையான கருத்துகளைத் தெரிவித்தார். ரயில்வே அமைச்சரின் கருத்துகளால்தான் தாங்கள் போராட்டம் நடத்த தீர்மானித்துள்ளதாக, இந்த அறிக்கையில் ரயில்வே ஊழியர்கள் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

ஒப்பந்தத்தின் படி வேலை செய்வது என்பது விதிமுறைகளின்படி (Work-to-rule) ஊழியருக்கான வேலையை மட்டும் செய்துவிட்டு கூடுதல் பணிகளைச் செய்யாமல் தவிர்ப்பதாகும். இது பொதுவாக தொழிற்துறைகளில் போராட்டம் நடத்தப் பயன்படுத்தப்படும் ஒரு உத்தியாகும். ஊழியர்கள் தங்களுக்கான விதிமுறைகள் மற்றும் ஒழுங்குமுறைகளைக் கடைப்பிடிப்பர். ஆனால், கூடுதல் நேரம் பணிபுரிவது போன்றவை தவிர்க்கப்படுவதால் உற்பத்தித் திறன் சரியக்கூடும்.

இது பற்றி அனைத்திந்திய ரயில்வே ஆண்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரான ஷிவ் கோபால் மிஷ்ரா பேசுகையில், “ஊழியர்கள் தங்களுக்கான விதிமுறைகளின்படி மட்டுமே பணி செய்வார்கள். சரக்கு ரயிலை இயக்கும் ஒரு ஓட்டுநர் பயணிகள் ரயிலை இயக்க மாட்டார். யாருமே தங்களுக்கான தினசரிப் பணி நேர வரம்பை கடந்து வேலை செய்யமாட்டார்கள்” என்று தெரிவித்துள்ளார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share