Mமோதலுக்குத் தயாரான சந்தானம்

b

சிவகார்த்திகேயனின் ‘வேலைக்காரன்’ படத்தோடு மோதலுக்குத் தயாராகியுள்ளது சந்தானம் நடித்துள்ள ‘சக்க போடு போடு ராஜா’ திரைப்படம்.

சந்தானம், வைபவி சாண்டில்யா நடித்துள்ள படம் ‘சக்க போடு போடு ராஜா’. விடிவி கணேஷ் தயாரிக்க சேதுராமன் இயக்கியுள்ளார். சிம்பு முதன்முறையாக இந்தப் படத்துக்கு இசை அமைத்துள்ளார். விவேக், பவர் ஸ்டார் மற்றும் ரோபோ சங்கர் ஆகியோர் நடித்துள்ளனர். அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்தப் படம் வருகிற டிசம்பர் 22ஆம் தேதி வெளிவருகிறது. படத்துக்குத் தணிக்கையில் `யு/ஏ’ சான்றிதழ் கிடைத்துள்ளது. காமெடி, ஆக்ஷன் என்டர்டெயினரான இந்தப் படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 23 நிமிடங்கள். இதே தேதியில் வெளிவரும் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘வேலைக்காரன்’ படத்திற்கு `யு’ சான்றிதழ் கிடைத்திருக்கிறது. இதன் ரன்னிங் டைம், 2 மணி நேரம் 39 நிமிடங்கள் 41 விநாடிகள். சந்தானத்தின் படம் பின்தங்கும் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில் கிறிஸ்துமஸ் ரேஸுக்குத் தயாராகியுள்ளது.

சிவகார்த்திகேயன், சந்தானம் இருவருமே விஜய் டிவியில் இருந்து சினிமாவுக்கு வந்தவர்கள். சிவகார்த்திகேயன் ஹீரோவாக வெற்றிக்கொடி நாட்டிவிட்ட நிலையில், ஹீரோவாகத் தன்னை நிலைநிறுத்திக்கொள்ளப் போராடுகிறார் சந்தானம். சிவகார்த்திகேயன் படத்தோடு மோதினாலும் தன் பலத்தை நிரூபிக்கும் முனைப்பில் தீவிரம் காட்டி வருகிறார் சந்தானம். கிறிஸ்துமஸ் ரேஸில் யார் ஜெயிப்பார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.�,

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts