mமோட்டார் காங்கிரஸுக்கு கட்கரி பாராட்டு!

Published On:

| By Balaji

லாரிகள் வேலை நிறுத்தத்தைக் கைவிட முடிவு செய்த அகில இந்திய மோட்டார் காங்கிரஸின் தீர்மானத்துக்கு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சரான நிதின் கட்கரி தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

லாரி உரிமையாளர்களின் கோரிக்கைகள் முக்கியமானவை என்றும், அவர்களின் நிறைவேறாத கோரிக்கைகள் குறித்து ஆய்வு நடத்த உயர் நிலைக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “அகில இந்திய மோட்டார் காங்கிரஸின் தீர்மானம் பாராட்டத்தக்கது. அரசின் கோரிக்கையை ஏற்று அவர்கள் தங்களது வேலை நிறுத்தத்தைக் கைவிட்டுள்ளனர். அவர்களின் கோரிக்கைகளில் சிலவற்றை ஏற்கெனவே நாங்கள் ஏற்றுள்ளோம். மீதமுள்ள கோரிக்கைகள் குறித்து விவாதிக்க உயர்நிலைக் குழு ஒன்றை அமைத்துள்ளோம்” என்று பதிவிட்டுள்ளார்.

நாக்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த நிதின் கட்கரி, “அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் வேலை நிறுத்தத்தைக் கைவிட்டது மகிழ்ச்சியளிக்கிறது. இதற்கு நிதியமைச்சர் பியூஷ் கோயல் மிகவும் உதவிகரமாக இருந்தார். எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்கள் குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று நான் அவர்களுக்கு உறுதியளிக்கிறேன். பொருளாதாரத்தை உயிர்ப்புடன் வைத்திருப்பதில் அவர்களது பங்கு முழுமையானது. அவர்களின் பிரச்சினைகளை விரைந்து தீர்ப்பதற்கு எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்” என்று உறுதியளித்துள்ளார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel