mமுதலீடு செய்ய தென்கொரியாவுக்கு அழைப்பு!

Published On:

| By Balaji

தென்கொரியாவைச் சேர்ந்த நிறுவனங்கள் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் அதிகளவில் முதலீடு செய்ய வேண்டும் என்று அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு அழைப்பு விடுத்துள்ளார்.

இதுபற்றி சந்திரபாபு நாயுடு கூறியதாக ஆந்திர மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ’ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் முதலீடு செய்வதற்கு ஏற்கெனவே 37 தென்கொரிய நிறுவனங்கள் ஆர்வம் தெரிவித்து ரூ.3,000 கோடிக்கு மேல் முதலீடு செய்ய ஒப்புதல் தெரிவித்துள்ளன. முக்கியமாகக் கியா மோட்டார்ஸ் நிறுவனம் ஆந்திராவில் ஆலை அமைக்க ரூ.4,995 கோடியை முதலீடு செய்வதோடு, அங்கு சுமார் 7,171 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளது. கொரிய நகரமைப்பு ஒன்றும் பிரத்தியேகமாக ஆந்திராவில் விரைவில் அமைக்கப்படும். இந்தியா முழுவதும் 3.5 கிகா வாட் மின்னுற்பத்தித் திறன் கொண்ட சோலார் மின்னுற்பத்தி ஆலைகள் இருப்பதால் ஆந்திர மாநிலத்தில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் ஒன்றை அமைக்க கொரியாவின் ஜுசங் என்ஜினியரிங் நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்துள்ளோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று நாள் பயணமாக தென்கொரியா செல்லும் சந்திரபாபு நாயுடு டிசம்பர் 4ஆம் தேதி அங்கு புறப்பட்டார். ஆந்திராவை தங்களது இரண்டாவது வீடாகக் கருதி இங்கு அதிகளவில் கொரிய நிறுவனங்கள் முதலீடு செய்ய வேண்டும் எனவும், அந்நாட்டின் தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தித் துறையின் அம்சங்கள் ஆந்திர மாநிலத்தை மிகவும் கவர்ந்துள்ளதாகவும் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். பிப்ரவரி மாதம் விசாகப்பட்டினத்தில் நடக்கவிருக்கும் பங்குதாரர் மாநாட்டில் பங்கேற்க தென் கொரிய நிறுவனங்களுக்கு ஆந்திர அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share