மூன்று நாட்களாக தியேட்டர்களை இழுத்து மூடி, இரட்டை வரி விதிப்புக்கு எதிராக தியேட்டர் உரிமையாளர்கள் தங்களது போராட்டத்தைத் தொடங்கியிருந்தார்கள். தமிழக அரசுடன் நடத்திய இரண்டு கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்த நிலையில், தற்போது மூன்றாவது கட்டமாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
அதிருப்தியுடன் சென்றுகொண்டிருந்த பேச்சுவார்த்தையின் திசைமாறியிருப்பதாகவும், வருகிற வெள்ளிக்கிழமை முதல் தியேட்டர்கள் திறக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகவும், தென்னிந்திய வர்த்தகசபையின் தலைவர் அபிராமி ராமநாதன், ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் நடைபெற்ற விழாவில் பேசினார்.�,