mமாவட்ட நிர்வாகிகளுடன் சசிகலா சந்திப்பு!

Published On:

| By Balaji

முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக தகவல் வந்துள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா மாவட்ட நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஜனவரி 4 ஆம் தேதி முதல் ஜனவரி 9 ஆம் தேதி வரை மாவட்ட வாரியாக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் பொதுச்செயலராகிவிட்ட சசிகலா அடுத்தது கட்ட நகர்வை திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறார். மூத்த நிர்வாகிகளும் சசிகலா முதல்வராக பொறுப்பேற்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மணிகண்டன், தங்கமணி ஆகியோருடன் சசிகலா நேற்று மாலை ஆலோசனை நடத்தினர். இந்நிலையில் ஜனவரி 4-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை மாவட்ட வாரியாக நிர்வாகிகளை சந்திக்க சசிகலா அழைப்பு விடுத்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி அதிமுக நாடாளுமன்ற, சட்டமன்ற, உறுப்பினர்கள் இந்த ஆலோசனையில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட வாரியாக ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலக்தில் ஆலோசனை கூட்டம் நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது. ஒன்றிய, நகர, பேரூராட்சி,மற்றும் மாவட்ட செய்யலளர்களும்,பிற அமைப்புகளின் செயலாளர்களும் கலந்துகொள்வார்கள் என்று கூறப்படுகிறது. ஜனவரி 4 ஆம் தேதி காலை அதிமுக தலைமை அலுவலகத்தில் தொடங்கும் இந்த ஆலோசனை கூட்டம் 9 ஆம் தேதி நிறைவடையும். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 20 நிமிடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.இதன் மூலம் அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சரிக்கட்டிவிட முடியும் என உறுதியாக சசிகலா நம்புகிறார் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment