mமரண தண்டனை : கோபத்தில் கொலோசியம் அரங்கம்!

public

இஸ்லாமிய மதத்துக்கு எதிராகப் பேசிய குற்றச்சாட்டில் பாகிஸ்தானில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் கிறிஸ்தவ பெண் ஆசியா பீபியாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து ரோம் நகரில் உள்ள கொலோசியம் அரங்கம் சிவப்பு விளக்குகளால் ஒளியூட்டப்பட்டது.

பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணம், ஷேய்க்குப்புரா மாவட்டத்தைச் சேர்ந்த ஆசியா பீபி, என்ற கிறிஸ்தவ பெண், 2009ஆம் ஆண்டு, ஜூன் மாதம் சக பெண்களிடம் இஸ்லாமிய மதத்துக்கு எதிராகப் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து அவர் மீது தொடரப்பட்ட வழக்கில் ஆசியா பீபியாவுக்கு மரண தண்டனை விதித்து விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது. அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை லாகூர் உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. ஐந்து குழந்தைகளுக்குத் தாயான ஆசியா பீபியின் மரண தண்டனையை எதிர்த்து உலகம் முழுவதிலுமிருந்து கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து அவர் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில், தனிப்பட்ட விரோதத்திற்காக என் மீது குற்றம் சுமத்தப்பட்டதாக மேல் முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவரைத் தூக்கிலிட தடை விதித்து உத்தரவிட்டது.

தற்போது அவர் சிறையில் இருக்கிறார். இந்நிலையில் அவரின் மரண தண்டனையை ரத்து செய்யக் கோரியும், ஆசியா பீபியாவுக்கு ஆதரவாகவும் நேற்று (பிப்ரவரி 24) இரவு ரோம் நகரில் உள்ள கொலோசியம் அரங்கம் சிவப்பு விளக்குகளால் ஒளியூட்டப்பட்டது.

கொலோசியமானது தொழில்முறைப் போர்வீரர்கள், தங்களுக்குள்ளும், விலங்குகளுடனும், பயங்கரமான குற்றவாளிகளுடனும், சண்டையிடுவதற்காகக் கட்டப்பட்ட ஒரு அரங்கம் ஆகும். தற்போது கிறித்துவர்களின் புனிதத்தலமாக விளங்கும் கொலோசியம் அரங்கத்திற்குச் சிவப்பு விளக்குகளால் ஒளியூட்டி நூற்றுக்கணக்கான கிறித்துவர்கள் கூடி ஆசியா பீபியாவுக்காக பிரார்த்தனை செய்தனர். இதில் அவரது கணவர் மற்றும் மகள்களும் கலந்து கொண்டனர்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0