mபெண் குழந்தைகள் தத்தெடுப்பு அதிகரிப்பு!

Published On:

| By Balaji

கடந்த 5 ஆண்டுகளைக் காட்டிலும் 2018-19ஆம் ஆண்டில் இந்தியாவில் குழந்தைகள் தத்தெடுப்பு அதிகரித்துள்ளதாக ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

டெல்லியில் உள்ள குழந்தை தத்தெடுப்பு வள அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, குழந்தை இன்மை காரணமாக 2018-19ஆம் ஆண்டில் உள் நாட்டில் இருந்து 3,374 குழந்தைகள், வெளி நாடுகளில் இருந்து 653 குழந்தைகள் என மொத்தம் 4,027 குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.

மேலும் அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது, 2017-18ஆம் ஆண்டில் 3,927 குழந்தைகளும், 2016-17ஆம் ஆண்டில் 3,788 குழந்தைகளும், 2015-16ஆம் ஆண்டில் 3,677 குழந்தைகளும் தத்தெடுக்கப்பட்டு உள்ளனர். கடந்த 5 ஆண்டுகளில் 2018-19ஆம் ஆண்டில் தான் அதிக எண்ணிக்கையில் குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டுள்ளனர். 4,027 பேரில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து 477 பெண் குழந்தைகள் உள்பட 845 குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டுள்ளனர். அம்மாநிலத்தில் குழந்தைகள் தத்தெடுப்புக்கான ஏஜென்சிகள் அதிகளவில் உள்ளது. மகாராஷ்டிராவைத் தொடர்ந்து கர்நாடகாவில் 281 குழந்தைகளும், 244 குழந்தைகளும் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் 239 குழந்தைகளும் தத்தெடுக்கப்பட்டுள்ளனர்.

ஹரியானாவில் தத்தெடுக்கப்பட்ட 72 குழந்தைகளில் 45 பேர் பெண்கள் ஆவர். டெல்லியில் 103 பெண் குழந்தைகள் உட்பட 153 குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், பெண் குழந்தைகள் மீதான மக்களின் எண்ணம் மாறி வருகிறது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகள் அதிக அளவில் தத்தெடுக்கப்படுகின்றனர்” என தெரிவித்துள்ளார்.

.

.

**

மேலும் படிக்க

**

.

.

**

[அமமுக தோல்விக்கான காரணங்கள்: அறிக்கை அனுப்பிய நிர்வாகிகள்!](https://minnambalam.com/k/2019/05/27/15)

**

.

**

[தலித்திய தனிமைப்படுதல் என்னும் அபாயம்!](https://minnambalam.com/k/2019/05/27/17)

**

.

.

**

[ரயில்வே இணையமைச்சர் ஆகிறார் ரவீந்திரநாத்?](https://minnambalam.com/k/2019/05/26/55)

**

.

**

[அதிமுகவில் ராஜ்யசபா ரேஸ்!](https://minnambalam.com/k/2019/05/26/52)

**

.

.

**

[வரப் போகும் நாட்கள் கடினமானவை: சோனியா](https://minnambalam.com/k/2019/05/27/18)

**

.

.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share