உலகிலேயே பெண்களுக்கு ஆபத்தான நாடு இந்தியா என்ற ஆய்வுக்கு காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்ததற்கு பாஜக செய்தித் தொடர்பாளர் மீனாட்சி லேக்கி எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தின் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் தொண்டு நிறுவனம் சார்பில் உலகில் உள்ள 193 நாடுகளில் பெண்களுக்கு ஆபத்து நிறைந்த நாடுகள் பற்றிய ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வு முடிவில் பெண்களுக்கு ஆபத்தான நாடுகளில் [இந்தியா](https://www.minnambalam.com/k/2018/06/26/49) முதலிடம் வகிப்பதாகத் தெரிவித்திருந்தது.
இந்த ஆய்வு முடிவுக்கு காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, நாட்டின் பிரதமர் பூங்காவினைச் சுற்றி யோகா செய்து, அதனை வீடியோ எடுத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் பெண்களுக்கான பாதுகாப்பற்ற நாடாக இந்தியா முன்னேறி வருகிறது. சிரியா, சோமாலியா நாடுகளைக் காட்டிலும் பெண்களுக்கு இந்தியா ஆபத்தான நாடு என்பது அவமானம்” என்று குறிப்பிட்டிருந்தார்.
ராகுலின் இந்த விமர்சனத்துக்கு பாஜக செய்தித் தொடர்பாளர் மீனாட்சி லேக்கி நேற்று (ஜூலை 3) மறுப்புத் தெரிவித்துள்ளார். “கத்துவா சிறுமி பாலியல் வன்கொடுமையினை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் போராட்டம் நடைபெற்றபோது பிரியங்கா காந்திக்குமே பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டது” என்று குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் சமூக வலைதளங்களை மேற்பார்வை செய்து வந்த திவ்யா ஸ்பந்தனாவுக்கும் சக ஊழியரால் இதே நிலை ஏற்பட்டது. அப்போது பாதிக்கப்பட்ட பெண்ணுக்குப் பிரச்சினை வராமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டெல்லி காவல் துறையிடம் வலியுறுத்தியதாகவும் தெரிவித்தார்.
மேலும், ராய்ட்டர்ஸ் தொண்டு நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வு முடிவு போலி என்று, கூறிய மீனாட்சி லேக்கி, அந்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு குறை கூறக் கூடாது என்றார். உலகின் பாலியல் பலாத்காரத் தலைநகராக இருப்பது நியூயார்க்கே தவிர நியூ டெல்லி அல்ல. இந்தியாவைச் சிறுமைப்படுத்தும் நோக்கத்தோடு இந்த ஆய்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இந்தியா பெண்களுக்குப் பாதுகாப்பற்ற நாடு என்ற ஆய்வை ஏற்க முடியாது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசி தரூரும் மறுப்புத் தெரிவித்தார்.�,”