தண்ணீர் தட்டுப்பாட்டால் பள்ளிகளுக்கு விடுமுறை என்ற செய்தி தவறானது என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வரலாறு காணாத அளவுக்குத் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாகச் சென்னையில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தண்ணீர் தட்டுப்பாட்டால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது. வேலைக்குச் செல்பவர்கள் குறித்த நேரத்துக்கு பணிக்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சிலர் வீட்டிலிருந்த படியே வேலை செய்து வருகின்றனர். இந்த சூழலில் சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் செயல்படும் பள்ளிகளிலும் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருவதால் மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கோடை விடுமுறைக்குப் பிறகு கடந்த 3 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. வெயிலின் தாக்கத்தாலும், தண்ணீர் பஞ்சத்தாலும் மாணவர்களின் நலன் கருதி தாமதமாகப் பள்ளிகளை திறக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்த நிலையில் திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்பட்டன.
இந்நிலையில் தண்ணீர் தட்டுப்பாட்டால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படவுள்ளதாகத் தகவல் பரவியது. இதற்கு மறுப்புத் தெரிவித்துள்ள பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் இந்த தகவல் தவறானது என்று தெரிவித்துள்ளார்.
”பள்ளிகளில் தண்ணீர் பற்றாக்குறை இருப்பதாகத் தகவல் வருகிறது. தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்யப் பெற்றோர் ஆசிரியர் சங்கம் மூலம் நிதி ஏற்பாடு செய்யப்படும். பள்ளிகளில் தண்ணீர் பற்றாக்குறையைப் போக்க ஜூன் 17 முதல் ஆய்வுப் பணிகள் நடைபெறும். பள்ளிகளில் தண்ணீர் பிரச்சினை குறித்து அரசின் கவனத்திற்குக் கொண்டு வந்தால் 24 மணி நேரத்தில் சரிசெய்யப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
**
மேலும் படிக்க
**
**[டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கலைப்பு- ஸ்டாலினை குறிவைக்கும் வருமான வரித்துறை!](https://minnambalam.com/k/2019/06/14/65)**
**[தினகரன் தளபதிக்கு எடப்பாடி தூது: ஜெயக்குமார் எதிர்ப்பு!](https://minnambalam.com/k/2019/06/14/51)**
**[அதிமுக: அந்த 11 பேர் குழுவில் யார் யார்?](https://minnambalam.com/k/2019/06/13/22)**
**[மூடப்படும் அருவிகள்: கேரளத்தில் பண மழை!](https://minnambalam.com/k/2019/06/14/20)**
**[பாக்கியராஜ் அணிக்கு விஜயகாந்த் ஆதரவு!](https://minnambalam.com/k/2019/06/13/44)**
�,”