Mபடப்பிடிப்பை முடித்த அஞ்சலி

Published On:

| By Balaji

விஜய் ஆண்டனியின் காளி படத்தில் நான்கு நாயகிகளில் ஒருவராக நடித்து வரும் அஞ்சலி தனது கதாபாத்திரம் சம்பந்தமான படப்பிடிப்பை முடித்திருப்பதாக அறிவித்துள்ளார்.

தரமணி படத்தில் கொஞ்ச நேரமே படத்தில் வந்திருந்தாலும் அழுத்தமான கேரக்டரில் நடித்து ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தவர் அஞ்சலி. ஜெய்யுடன் இணைந்து நடித்த பலூன் படம் சமீபத்தில் வெளியானது. அடுத்ததாக ராம் இயக்கத்தில் மம்முட்டியுடன் நடித்த பேரன்பு வெளியாக இருக்கிறது. மலையாளத்தில் ரோசாப்பூ படத்தில் நடித்து வருவதோடு, விஜய் ஆண்டனியின் காளி படத்தில் நான்கு நாயகிகளில் ஒருவராக நடித்து வருகிறார்.

‘வணக்கம் சென்னை’ படத்திற்குப் பிறகு கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தை விஜய் ஆண்டனி பிலிம் கார்பொரேஷன் சார்பாக அவரது மனைவி பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிக்கிறார். விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக அஞ்சலி, சுனைனா, அம்ரிதா, ஷில்பா மஞ்சுநாத் ஆகிய நான்கு நாயகிகள் நடிக்கின்றனர்.

இந்நிலையில் தனது கதாபாத்திரம் சம்பந்தமான படிப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாக அஞ்சலி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதுடன் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel