mதேவராட்டம் முத்தையா இயக்கத்தில் சிம்பு?

public

நடிகர் சிம்புவையும், கவுதம் கார்த்திக்கையும் வைத்து ஸ்டூடியோ கிரீன் ப்ரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் ஒரு படத்தை உருவாக்கவுள்ளதாக சில வாரங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. இப்படத்தை இயக்குநர் நாரதன் இயக்கவுள்ளார். இப்படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஸ்டூடியோ கிரீன் ப்ரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சிம்பு நடிக்கவுள்ளார். இப்படத்தை முத்தையா இயக்கவுள்ளார். இதற்கு முன்பு கவுதம் கார்த்திக்கை வைத்து முத்தையா இயக்கி அண்மையில் வெளியான தேவராட்டம் திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வரவேற்பை பெறவில்லை.

அடுத்தபடம் தொடர்பாக சிம்புவுடன் முத்தையா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். தற்போது வெங்கட் பிரபு இயக்கி வரும் மாநாடு படத்தின் பணிகளில் சிம்பு பிஸியாக உள்ளார். இப்படத்தை தொடர்ந்து முத்தையா படத்தின் பணிகளில் சிம்பு இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹரி இயக்கத்தில் உருவான கோவில் படத்திற்கு பின் கிராமப்புற கதைகளில் சிம்பு நடிக்கவில்லை. முத்தையாவோ கிராமப்புற கதைகளை படமாக்கி வருகிறார். ஆக, மீண்டும் கிராமப்புற கதைப்பின்னணி கொண்ட படத்தில் சிம்புவை காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் மாநாடு படம் நிறுத்தப்பட்டு விட்டதாக சில செய்திகள் வெளியாகின. எனினும், படத்தின் பணிகள் நடைபெறுவதாகவும், வதந்திகளை நம்பவேண்டாம் எனவும் படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் கமாட்சி அண்மையில் விளக்கமளித்தார். சிம்பு உடல் எடையைக் குறைத்தபிறகு வெளியாகும் படம் என்பதால் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

.

.

**

மேலும் படிக்க

**

.

**

[தினகரனுக்கு எடப்பாடி சொன்ன செய்தி!](https://minnambalam.com/k/2019/05/17/27)

**

.

**

[டிஜிட்டல் திண்ணை: கெஞ்சல், மிரட்டல்- கமல் வெளியிடாத ரகசியத் தகவல்!](https://minnambalam.com/k/2019/05/17/84)

**

.

**

[ரித்தீஷ் மனைவி மீது புகார்!](https://minnambalam.com/k/2019/05/17/51)

**

.

**

[ரசிகர்களை ஏமாற்றிய மிஸ்டர் லோக்கல்!](https://minnambalam.com/k/2019/05/16/70)

**

.

**

[ரவீந்திரநாத் எம்பி: கல்வெட்டில் பெயர் மறைப்பு!](https://minnambalam.com/k/2019/05/17/56)

**

.

.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0