Mசிறையில் முருகன் மவுனவிரதம்

Published On:

| By Balaji

முன்னாள் பிரதமர் ராஜீவ் வழக்கில் முருகன், நளினி உள்ளிட்டோர் தண்டனை பெற்று வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் முருகன் நேற்று சிறையில் மௌனவிரதம் இருந்தார். இதுகுறித்து சிறைத்துறை கண்காணிப்பாளர் சண்முகசுந்தரம் கூறுகையில், ‘சித்திரா பௌர்ணமி நாளில் முருகன் உணவு சாப்பிடாமல் மௌனவிரதம் இருந்தார். இதனால், நீதிமன்ற உத்தரவுப்படி முருகனும் நளினியும் 15 நாளுக்கு ஒருமுறை சந்திப்பது நடக்கும். நேற்று முருகன் மௌனவிரதம் இருந்ததால் நளினியைச் சந்திக்க மறுத்துவிட்டார்’ என்று தெரிவித்தார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel